LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் தொடங்கியது

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் 2023 செப்டம்பர் 23-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் கடந்த 2022-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டியது. ஆனால் கரோனா தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்த போட்டிகள்  வரும் அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இம்முறை 40 விளையாட்டுகளில் 61 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டிகள் அனைத்தும் ஹாங்சோ உள்ளிட்ட 5 பகுதிகளில் உள்ள 54 இடங்களில் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியில் ஆசிய கண்டங்களைச் சேர்ந்த 12 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
**********************
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் போட்டி
**********************************
மொத்தம் 481 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. இந்தியாவில் இருந்து 634 வீரர், வீராங்கனைகள் 38 வகையான விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா அதிகபட்சமாக கடந்த 2018-ம் ஆண்டு போட்டியில் 16 தங்கம் உட்பட 70 பதக்கங்கள் வென்றிருந்தது. ஆசிய விளையாட்டு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் போட்டியாக அமைந்துள்ளதால் வீரர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
***********************************
செஸ், இ-ஸ்போர்ட்ஸ், கபடி, காம்பவுண்ட் வில்வித்தை, பிரிட்ஜ், கிரிக்கெட், படகு போட்டி, ஸ்குவாஷ் ஆகிய 8 விளையாட்டுகளில் வலுவான போட்டியாளர்களாக இருப்பதால் இவற்றில் இந்தியா தங்கம் வெல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், டேபிள் டென்னிஸ் ஆகியவற்றிலும் இந்தியா கணிசமான பதக்கங்களை கைப்பற்றக்கூடும்.
****************************
பதக்கங்களை குவிக்கத்தொடங்கிய இந்திய வீரர்கள்
**********************
தடகளத்தை பொறுத்தவரையில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து க்கொள்ளக்கூடும். 100 மீட்டர் ஓட்டத்தில் ஜோதி யார்ராஜி, நீளம் தாண்டுதலில் ஜெஸ்வின் ஆல்ட்ரின், முரளி ஸ்ரீசங்கர், டிரிப்பிள் ஜம்ப்பில் பிரவீன் சித்ரவேல், 1500 மீட்டர் ஓட்டத்தில் அஜய் குமார் சரோஜ், 800 மீட்டர் ஓட்டத்தில் கிருஷ்ணன் குமார், குண்டு எறிதலில் தஜிந்தர் பால் சிங், 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸில் அவினாஷ் சேபிள் ஆகியோர் தங்கம் வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன. இவர்களுடன் தொடர் ஓட்டத்தில் இந்திய ஆடவர், மகளிர் அணிகளும் முத்திரை பதிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போட்டிகள் தொடங்கிய 2-வது நாளில் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவிக்கத்தொடங்கிவிட்டனர். அதன்படி 3 வெள்ளிப்பதக்கமும், 2 வெண்கலமும் வென்றனர்.

by Kumar   on 25 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.