LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

மொரீஷியஸில் 16-வது உலகத் தமிழ் பண்பாட்டு மாநாடு

 

மொரீஷியஸ் நாட்டில், மொரீஷியஸ் பல்கலைக்கழகத்தில் 16-வது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு கோலாகலமாக  நடைபெற்றது. மொரீஷியஸ் நாட்டின் முன்னாள் துணை அதிபர் பார்லேன் வையாபூரி  பண்பாட்டு மாநாட்டை தொடக்கி வைத்தார்.
***********************************
இம்மாநாட்டில் மலேசிய பிரதிநிதித்துவ கெமிலாங் கூட்டுறவு கழக தலைமை நிர்வாகி கஜேந்திரன் சிதம்பரம், நெகிரி செம்பிலான் தமிழ்ப்பள்ளி உருமாற்ற இயக்கத் தலைவர் டத்தோ டாக்டர் கனகராஜா ராமன் ஆகியோரின் தலைமையிலான 46 பேர் அடங்கிய குழுவினர் இதில் பங்கேற்றனர் .
************************************
மாநாட்டின் தொடக்க விழாவின்போது உலக பண்பாட்டு இயக்கத்தில் நீண்டகாலம் சேவையாற்றி வந்த மலேசிய நாட்டு பிரதிநிதித்துவ அமைப்பின் உதவித் தலைவரும் பிரபல அரசியல்வாதியும் சமூகநலவாதியும் எழுத்தாளருமான முனைவர்  தி.இராமநாயகத்திற்கு பண்பாட்டுச் சேவை தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவ்விருதை பெற்ற ஒரே பிரமுகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
**************************************
மலேசியாவைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதியும், உலக தமிழர் பண்பாட்டு இயக்க பொறுப்பாளர்களில் ஒருவருமான முன்னாள் தெலுக் கெமாங் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜெராம் பாடாங் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ டாக்டர் கிருஷ்ணன் லட்சுமணனுக்கு வைரத் தமிழர் விருது வழங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து கெமிலாங் கூட்டுறவு கழகத் தலைமை நிர்வாகி கஜேந்திரன் சிதம்பரம், ஆசிரியர் மேனகா நாராயணசாமி, வெ.விஜயா ஜனார்த்தனன் ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது.
************************************** 
மேலும், உலகத் தமிழ்மாமணி விருது பெறும் 24 பிரமுகர்களில், ந.வி.பொன்னி வீரப்பன், மாநாட்டின் இணைச் செயலாளர் த.கணேசன் ஆகிய இருவரும் மலேசிய நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.
***********************************
முன்னதாக இம்மாநாட்டின் தொடக்க நிகழ்வில் தமிழ் பண்பாட்டு பாரம்பரிய இசை, நடன படைப்புகளுடன்  சிறப்பு விருந்தினர்கள் வரவேற்கப்பட்டனர். அதில், முத்தாய்ப்பு அங்கமாக மொரீஷியஸ் நாட்டின் நடனக் கலைஞர்களின் பரதநாட்டியமும், புதுச்சேரி தமிழ் பாரம்பரிய நடனக்கலைஞர்களின் பாரம்பரிய படைப்புகளும் இடம்பெற்றன.

மொரீஷியஸ் நாட்டில், மொரீஷியஸ் பல்கலைக்கழகத்தில் 16-வது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு கோலாகலமாக  நடைபெற்றது. மொரீஷியஸ் நாட்டின் முன்னாள் துணை அதிபர் பார்லேன் வையாபூரி  பண்பாட்டு மாநாட்டை தொடக்கி வைத்தார்.

இம்மாநாட்டில் மலேசிய பிரதிநிதித்துவ கெமிலாங் கூட்டுறவு கழக தலைமை நிர்வாகி கஜேந்திரன் சிதம்பரம், நெகிரி செம்பிலான் தமிழ்ப்பள்ளி உருமாற்ற இயக்கத் தலைவர் டத்தோ டாக்டர் கனகராஜா ராமன் ஆகியோரின் தலைமையிலான 46 பேர் அடங்கிய குழுவினர் இதில் பங்கேற்றனர்

மாநாட்டின் தொடக்க விழாவின்போது உலக பண்பாட்டு இயக்கத்தில் நீண்டகாலம் சேவையாற்றி வந்த மலேசிய நாட்டு பிரதிநிதித்துவ அமைப்பின் உதவித் தலைவரும் பிரபல அரசியல்வாதியும் சமூகநலவாதியும் எழுத்தாளருமான முனைவர்  தி.இராமநாயகத்திற்கு பண்பாட்டுச் சேவை தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவ்விருதை பெற்ற ஒரே பிரமுகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முத்தாய்ப்பு அங்கம்

மலேசியாவைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதியும், உலக தமிழர் பண்பாட்டு இயக்க பொறுப்பாளர்களில் ஒருவருமான முன்னாள் தெலுக் கெமாங் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜெராம் பாடாங் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ டாக்டர் கிருஷ்ணன் லட்சுமணனுக்கு வைரத் தமிழர் விருது வழங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து கெமிலாங் கூட்டுறவு கழகத் தலைமை நிர்வாகி கஜேந்திரன் சிதம்பரம், ஆசிரியர் மேனகா நாராயணசாமி, வெ.விஜயா ஜனார்த்தனன் ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது.

மேலும், உலகத் தமிழ்மாமணி விருது பெறும் 24 பிரமுகர்களில், ந.வி.பொன்னி வீரப்பன், மாநாட்டின் இணைச் செயலாளர் த.கணேசன் ஆகிய இருவரும் மலேசிய நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.

முன்னதாக இம்மாநாட்டின் தொடக்க நிகழ்வில் தமிழ் பண்பாட்டு பாரம்பரிய இசை, நடன படைப்புகளுடன்  சிறப்பு விருந்தினர்கள் வரவேற்கப்பட்டனர். அதில், முத்தாய்ப்பு அங்கமாக மொரீஷியஸ் நாட்டின் நடனக் கலைஞர்களின் பரதநாட்டியமும், புதுச்சேரி தமிழ் பாரம்பரிய நடனக்கலைஞர்களின் பாரம்பரிய படைப்புகளும் இடம்பெற்றன.

by Kumar   on 03 Oct 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.