|
||||||||
சிங்கப்பூரில் 12ஆவது உலகத் தமிழாசிரியர் மாநாடு செப்டம்பர் 7,8 ஆகிய தேதிகளில் மிகச்சிறப்பாக நடந்தேறியது |
||||||||
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 7,8 ஆகிய தேதிகளில் 12ஆவது உலகத் தமிழாசிரியர் மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த பல தமிழ் கல்வி அமைப்புகளை சார்ந்த அறிஞர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியும், கலந்துகொண்டும் சிறப்பித்தனர். இந்த உலகத் தமிழாசிரியர் மாநாடு இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. முதல் உலகத் தமிழாசிரியர் மாநாடு 1992 ஆம் ஆண்டு சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் சிங்கப்பூரில் இடம்பெற்றது. அதன்பின், 2005 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளில் இம்மாநாட்டைச் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் வெற்றிகரமாக நடத்தியுள்ளது. ஏழாண்டுகளுக்குப்பின், மீண்டும் இம்மாநாடு நான்காவது முறையாகச் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் இடம்பெறுகிறது. சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம், உலகத் தமிழாசிரியர் பேரவை, சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தன. 'பன்மொழிச் சூழலில் தமிழ்மொழி கற்றல் கற்பித்தல்' என்பது மாநாட்டின் கருப்பொருளாகக் கொண்டு சிங்கப்பூர் உட்பட மலேசியா, இலங்கை, ஆஸ்திரேலியா, கனடா, தென்னாப்பிரிக்கா, மொரீஷியஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 400 பேராளர்கள் மாநாட்டில் கலந்துகொள்வர். இந்த நிகழ்ச்சியில் உலகேந்துமிருந்து வந்த 50 ஆய்வுக் கட்டுரைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. மாநாட்டின் கருப்பொருளான, பன்மொழிச்சூழலில் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தல் தொடர்பான கட்டுரைகளைத் தமிழாசிரியர்கள் படைத்தனர். செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெறும் தொடக்க விழாவில் சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். முதன்மையுரையை பேராசிரியர் சாமுவேல் சுதானந்தா அவர்கள் வழங்கினார்.
இந்த மாநாட்டில் பேசப்பட்ட சில தலைப்புகள் :
மாநாட்டின் நிறைவுரையை சிறப்பு விருந்தினர் திரு சீ ஹொங் டாட், மூத்த துணை அமைச்சர் வர்த்தக, தொழில் அமைச்சு, கல்வி அமைச்சு, சிங்கப்பூர். வழங்கினார்.
காணொளிகளைக் காண: 12-ஆம் உலகத் தமிழாசிரியர் மாநாடு ,2018- சிங்கப்பூர் - Part 1 12-ஆம் உலகத் தமிழாசிரியர் மாநாடு ,2018- சிங்கப்பூர் - Part 2
|
||||||||
by Swathi on 15 Sep 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|