|
||||||||
எங்கள் வீட்டு அணில் |
||||||||
சுற்றி வர மரங்களுண்டு எங்கள் வீட்டிலே, பறவைகளும்,அணில்களும் நிறைய உண்டு அதன் மீதிலே !
அழகு அணில் குறு குறுவென குதித்து வந்தது,
மரத்தை விட்டு சமையலறையை எட்டி பார்த்தது,
அம்மா மட்டும் அப்பொழுது சமைத்துக்கொண்டிருந்தாள்.
அறுத்து வைத்த தேங்காய் ஒன்று அங்கிருந்தது,
முட்டை கண்ணால் மேலும்,கீழும் சுற்றி பார்த்தது,
ஒட்டி வந்த கயிற்றின் மேலே காலை வைத்தது.
அங்கிருந்து சத்தமில்லாமல் உள்ளே குதித்தது
வைத்திருந்த தேங்காயை கையில் எடுத்தது.
அரவம் கேட்டு அம்மா திரும்பி பார்த்தாளே.
தேங்காயை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தது,
திரும்பி பார்த்த அம்மாவுக்கு பாவமாய் இருந்தது
விட்டு விட்ட தேங்காயை எடுத்து வெளியே வைத்தாளே !
ஓடிய அணில் மரத்தில் ஏறி திரும்பி பார்த்தது,
வெளியில் வைத்த தேங்காய் கண்ணில் பட்டது.
பயந்து பயந்து மீண்டும் மெல்ல வந்தது.
வைத்திருந்த தேங்காயை கையில் எடுத்தது.
சுற்றும் முற்றும் பயந்து பயந்து திரும்பி பார்த்தது.
எதுவும் தெரியாதது போல் அம்மா நின்றாளே !.
அப்படியே தூக்கிக்கொண்டு, ஓடி மறைந்தது ! |
||||||||
My home Scurrel | ||||||||
by Dhamotharan.S on 13 Jan 2017 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|