LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

நடிப்பு, தயாரிப்பை தொடர்ந்து பாடகரானார் வி.டி.வி.கணேஷ் !!

வி.டி.வி.கணேஷ் தான் தயாரித்து நடிக்கும் இங்க என்ன சொல்லுது என்ற படத்தில் பாடல் ஒன்றை எழுதி பாடியுள்ளார்.

 

ஒஸ்தி, கண்ணா லட்டு தின்ன ஆசையா, போன்ற படங்களில் நடித்தவர் வி.டி.வி.கணேஷ். தற்போது இவர் ‘இங்க என்ன சொல்லுது’ படத்தை தயாரித்து ஹீரோவாகவும் நடித்து வருகிறார். வின்சென்ட் செல்வா இயக்கும் இந்தப்படத்தில், வி.டி.வி.கணேஷுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார். 45 வயதுக்குப் பின் கல்யாணம் செய்துகொள்ளும் ஒருவனின் கலாட்டாதான் இந்தப்படத்தின் கதை.

 

நடிகர் சிம்பு கெளரவ வேடத்தில் நடிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக ஆண்ட்ரியாவும் நடிக்கிறார். இத்தோடு குட்டி பயலே… குட்டி பயலே.... எனத் தொடங்கும் ஒரு பாடலை தானே எழுதி பாடவும் செய்திருக்கிறார் சிம்பு. கதையை நகர்த்தும் முக்கிய வேடத்தில் காமெடியன் சந்தானம் நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், மயில்சாமி, இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், ஸ்வர்ணமால்யா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் பிரபல எடிட்டர் ஆண்டனி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தரண் இசையமைத்துள்ள இப்படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் இடம்பெறுகின்றன. இதில் இரண்டு பாடல்களை விடிவி கணேஷ் எழுதியுள்ளார். எழுதியது மட்டும் இன்றி, தனது கனீர் குரலில் ஒரு பாடலை பாடவும் செய்துள்ளார். இந்த பாடல் பட்டாம்பூச்சியின் வாழ்க்கையைப் பற்றிய தத்துவப் பாடலாம். 

by Swathi   on 05 Dec 2013  0 Comments
Tags: விடிவி கணேஷ்   பாடகர்   இங்க என்ன சொல்லுது   VTV Ganesh   Inga Enna Solludhu        
 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.