தனது இடது மடியில் அமர்ந்திருக்கும் தாயாரை பெருமாள் இடது கையால் அரவணைத்தப்படி இருக்கும் லட்சுமி நரசிம்மரை பல இடங்களில்
பார்த்திருக்கலாம். ஆனால், இங்கு பெருமாளின் இடது மடியில் அமர்ந்த மகாலெட்சுமி பெருமாளின் தோளில் கைபோட்டபடி இருப்பதைக் காண முடியும்.
அவளது கையில் தாமரை மலர் உள்ளது. இவள் பெருமாளை நோக்கி தனது பார்வையைத் திருப்பியிருக்கிறாள். இங்கு வந்து கோரிக்கை வைக்கும்
பக்தர்களின் குறையை உடனே தீர்க்கும்படி அவள் பெருமாளிடம் தெரிவித்துக் கொண்டே இருக்கும் வகையில், அவர் மீது வைத்த கண்ணைத்
திருப்பாமல் இருப்பதாக ஐதீகம். இப்படி ஒரு சிலையமைப்பு காண்பதற்கு அரிய ஒன்றாகும். அது மட்டுமல்ல! இந்தப் பெருமாள் நரசிம்மர் என
அழைக்கப்பட்டாலும், அவருக்கு சிங்கமுகம் கிடையாது. இப்படிப்பட்ட பெருமாளை "பிரகலாத வரதன்' என அழைப்பது வழக்கம்.இதுபோன்ற
அமைப்புள்ள நரசிம்மரிடம் வைக்கும் கோரிக்கை பரிவுடன் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதும் நம்பிக்கை.
தனது இடது மடியில் அமர்ந்திருக்கும் தாயாரை பெருமாள் இடது கையால் அரவணைத்தப்படி இருக்கும் லட்சுமி நரசிம்மரை பல இடங்களில் பார்த்திருக்கலாம். ஆனால், இங்கு பெருமாளின் இடது மடியில் அமர்ந்த மகாலெட்சுமி பெருமாளின் தோளில் கைபோட்டபடி இருப்பதைக் காண முடியும். அவளது கையில் தாமரை மலர் உள்ளது. இவள் பெருமாளை நோக்கி தனது பார்வையைத் திருப்பியிருக்கிறாள்.
இங்கு வந்து கோரிக்கை வைக்கும் பக்தர்களின் குறையை உடனே தீர்க்கும்படி அவள் பெருமாளிடம் தெரிவித்துக் கொண்டே இருக்கும் வகையில், அவர் மீது வைத்த கண்ணைத் திருப்பாமல் இருப்பதாக ஐதீகம். இப்படி ஒரு சிலையமைப்பு காண்பதற்கு அரிய ஒன்றாகும். அது மட்டுமல்ல! இந்தப் பெருமாள் நரசிம்மர் என அழைக்கப்பட்டாலும், அவருக்கு சிங்கமுகம் கிடையாது. இப்படிப்பட்ட பெருமாளை "பிரகலாத வரதன்' என அழைப்பது வழக்கம். இதுபோன்ற அமைப்புள்ள நரசிம்மரிடம் வைக்கும் கோரிக்கை பரிவுடன் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதும் நம்பிக்கை. |