LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மரணத்துள் வாழ்வோம்

வேலியும் காவலும்

1
வேலிக்குப் பயிர்கள் மேலே
விருப்பமே இல்லைப் போலும்!
-சோலிக்கு முடிவு காண்பம்!
சுடுவம், என்று எழும்பிச் சென்று
தீ வைத்து முடித்த வேலி
திருப்தியை அடைந்திருக்கும் -
கோபத்தைத் தீர்த்திருக்கும்.

குவிந்ததோ - பயி¡¢ன் சாம்பல்!

2
தோட்டமுங் கொஞ்சம் செழிப்பு;
பயிர் பச்சை
நீட்டமாய் நீண்டு நெருங்கி மதாளித்துச்
சேட்டமாய் நிற்கிறது, செந்தளிர்ப்பாய்.
காய் கனிகள், பூக்கள் குலுங்கும்
புளுகமுள்ள கொப்புகளைக்
காட்டி நிற்கும் கண்குளிர, இன்பச் சிறு செடிகள்.

கற்கள் மலிந்த கலட்டித் தரையிலே
புற்கள் படர்ந்து புலுண்டுவது தான்
இந்தக் காணி நிலத்தின் இயற்கை.
அதை மாற்ற என்று
தீர்மானஞ் செய்த செயற் - கை வலிமையினால்,
கிண்டிக் கிளறி, கிணறிறைத்து நீர் பருக்கிக்
கொண்டிருக்கும் செய்கை
கொடுத்த பலன்களினால்
தோட்டமுங் கொஞ்சம் செழிப்பு, மதாளிப்பு!

நீர் இறைப்புத் தீண்டாமல் நிற்கின்ற
புல் நுனிகள்
காய்ந்து சருகாய்க் கருகி இருந்தாலும்,
பூச்சி அ¡¢த்துவிட்ட பூசணியின் சாம்பல் இலை
ஓட்டை பிடித்துத் துவண்டு கிடந்தாலும்,
நோய்பிடித்த கத்தா¢யின் நு¡றிலையில் தொண்ணு¡று
சூம்பிக் குனிந்தபடி தொய்ந்து கிடந்தாலும்,
அங்கங்கே நல்ல அழகான பச்சை உண்டு.
கண் குளிர -
இன்பச் சிறு செடிகள் -
தோட்டம் எங்கும்!

தோட்டமோ கொஞ்சம் செழிப்பு -
மதாளிப்பு!

3
சுற்றி நின்ற வேலி
சுருக்கென்று சீறிற்றாம்.
நட்ட நடு இரவில் -
நாலுபேர் காணாத கன்னங்கா¢ இருட்டில் -
காற்சட்டை போடாமல்,
தோட்டத்துள் வேலி நுழையத் தொடங்கியதாம்.
வேலி
பயிரை எல்லாம்
மேய என்று போயிற்றாம்.
மேயத் தொடங்கி விறுக்கென்று சப்பிற்றாம்.
மென்று மென்று தின்றதாம்.
மேல் இருந்த கொப்புகளை வா¡¢ இழுத்து
வளைத்து, முறித்தெறிந்து,
வேரோடு வாங்கிப் பிடுங்கி மிதித்ததாம்.
ஓங்கி உதைத்துத் துவைத்துப் பொடியாக்கித்
தீங்கு பரத்திச் சிதைத்ததாம் தோட்டத்தை.
பற்றாத பச்சைப் பயிர்கள் என்றும் பாராமல்,
பெற்றோலை ஊற்றி நெருப்பும் கொழுத்திற்றாம்.
வேலி கடித்து மிதித்த பயிர்க் குப்பைகளும்
வெந்து பொசுங்கிப் புதைந்து கா¢யாகி
நொந்து சுருண்டு -
வெறுஞ் சாம்பலாய்ப் போயினவாம்.

4
வேலை நிறுத்தமொன்றை
வேலை அற்ற சண்டியர்கள்
ஏவற் பேய் ஆகி இழுத்து விழுத்துதல் போல்
வேலி பயிரை எல்லாம்
மேய்ந்துவிட்டுப் போயிற்றோ?

காலிப் பயல்கள் கடையை உடைப்பதுபோல்
வேலி பயிரை எல்லாம்
மேய்ந்துவிட்டுப் போயிற்றோ?

காடையர்கள் நு¡லகத்திற் கைவா¢சை காட்டுதல்போல்
வேலி பயிரை எல்லாம்
மேய்ந்துவிட்டுப் போயிற்றோ?

கொன்று
தெருவிற் பிணங்கள் எறிவதுபோல்
வேலி பயிரை எல்லாம்
மேய்ந்துவிட்டுப் போயிற்றோ?

5
வேலிக்குப் பயிர்கள் மேலே
வெறுப்புத்தான் இருக்கும் என்றால் -
வேலி ஏன்? காவல் ஏனோ?
காவலோ வேலியாலே?

by Swathi   on 26 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.