|
||||||||
வாழ்த்து பெற்றேன் |
||||||||
உன் மனமறிந்தும் உதறி சிறகு விரிக்காத சிறுகூட்டுப் பறவைநான்.. எங்கிருந்தாலும் நலமாயிருக்கட்டுமென வாழ்த்தும் உன் அன்பு மனமெனும் சுவாசக்காற்றால் வாழ்கிறேன் சுகமாய்! எங்கிருந்தோ இன்றும் வாழ்த்தியிருப்பாய் கோடானுகோடி நட்புள்ளங்கள் வாழ்த்துரைக்கும் இனிய புத்தாண்டு நன்னாளில் வந்து சேர்ந்த உனதன்பு வாழ்த்துக் காற்றை சுவாசித்ததாலோ மனம் தெளிந்திருக்கிறேன் வெறுமையற்று இதயம் குளிர்ந்திருக்கிறேன்! இதயம் தொலைத்தவள் யெனினும் வாழ்த்துரைக்க மனமற்றவளா... அனுப்பிவிட்டேன் உனக்கும் என் வாழ்த்து சுவாசக்காற்றை! நலமோடு இருப்பாயென என்றென்றும் அகமுகம் மலர்ந்திருக்கிறேன்! ... நாகினி |
||||||||
by Bknagini on 14 Apr 2015 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|