|
|||||
அம்பறெல்லா தோஸி |
|||||
தேவையானவை : அம்பறெல்லாக்காய் - 10
சர்க்கரை - 2 கப்
ஏலக்காய்த் - 4
தண்ணீர் - 1 -2 கப்
செய்முறை :
1.அம்பறெல்லா காயின் தோலை கத்தியினால் சீவி அகற்றவும்.
2.தோலை சீவிய அம்பறெல்லாகாயை உரலில் போட்டு எல்லாப்பக்கமும் அடித்து தட்டையாக்கவும்.
3.அவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டுவைக்கவும் .
4.அதன் பின்னர் இன்னொருபாத்திரத்தில் தண்ணீருடன் சர்க்கரையை போட்டு நன்றாக கரைக்கவும்.
5.கரைத்த பின்னர் இவற்றுடன் ஏலக்காய்த் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக பாகு காய்ச்சவும்.
6.காய்ச்சிய பாகுடன் தட்டையான அம்பறெல்லா காயை போட்டு நன்றாக பிரட்டவும்.
7.பின்னர் சிறிது நேரம் அடுப்பில் வைத்து பாகு எல்லா அம்பிரலா காயில் சேரும் வரை திரும்பவும் நன்றாக பிரட்டவும்.
8.சிறிது நேரத்திற்கு பிறகு அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி வைக்கவும்
9.இறக்கிய பின்னர்அம்பறெல்லா காயை இன்னொரு பாத்திரத்தில் போடவும்.
10.இந்த கலவையை வெய்யில் வைத்து நன்றாக காயவிடவும் இவையாவும் ஒரளவு காய்ந்ததும் ஈரமற்ற கரண்டியால் மறு பக்கம் திருப்பி போட்டு காய விடவும்
11.இவை யாவும் நன்றாக காய்ந்ததும் சுத்தமான சுவையான இனிப்பான அம்பறெல்லா தோஸி தயாராகிவிட்டது .
|
|||||
by Arul Jothi on 17 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|