LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF

கன்னியாகுமரியில் ரூ 23 கோடி செலவில் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில்!

கன்னியாகுமரியில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.23 கோடி செலவில் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் கட்டப்பட்டு வருகிறது. 

இங்கு வெங்கடாஜலபதி சன்னதி, பத்மாவதி சன்னதி, ஆண்டாள் சன்னதி, கருட பகவான் சன்னதி ஆகியவை கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.

இது தவிர கோயிலுக்கு பக்தர்கள் வருவதற்கு பாதை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. தற்போது கோயில் கட்டுமானப் பணி இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது.

இப்பணிகளை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை பொறியாளர் சந்திரசேகர ரெட்டி தலைமையில் பொறியியல் துறை தலைமை அதிகாரி மற்றும் ஆலோசகர் கொண்டலராவ் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர்  பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் தலைமை பொறியாளர் சந்திரசேகர ரெட்டி கூறியதாவது:

இந்தியா முழுவதும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 6 இடங்களில் கோயில் அமைக்க திட்டமிடப்பட்டது. இதில், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் 22.5 கோடி மதிப்பீட்டில் கோயில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

இந்த பணிகள் வரும் டிசம்பர் இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. கும்பாபிஷேகம் எப்போது நடத்துவது என்பதை தேவஸ்தானம் முடிவு செய்யும். கோயிலுக்கு வருவதற்கு இணைப்புச் சாலை பணிகள் தற்போது நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

by   on 30 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கண்ணகி கோயில் திருவிழா கோலாகலம். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கண்ணகி கோயில் திருவிழா கோலாகலம்.
மதுரை வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் பச்சைப் பட்டு உடுத்தி எழுந்தருளினார் கள்ளழகர். மதுரை வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் பச்சைப் பட்டு உடுத்தி எழுந்தருளினார் கள்ளழகர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்.
உலகின் மிகப்பெரிய 10 இந்துக் கோவில்கள் எங்கு உள்ளது தெரியுமா? உலகின் மிகப்பெரிய 10 இந்துக் கோவில்கள் எங்கு உள்ளது தெரியுமா?
பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு. பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு.
பங்குனி உத்திரம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள். பங்குனி உத்திரம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்.
மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன? மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன?
மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...! மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.