|
||||||||
தேவையில்லாதவை வாழ்க்கைக்கு தேவை |
||||||||
கசப்பு நாவுக்கு சுவைப்பதில்லை உடலுக்கு நல்லது என்றாலும்
உண்மை எப்பொழுதும் இனிப்பதில்லை
உள்ளத்துக்கு நன்மை என்றாலும்
பொறுமை எப்பொழுதும் ஏற்பதில்லை
காரியம் வெற்றி ஆனாலும்
நேர்மை எப்பொழுதும் தேவையில்லை
இறுதியில் வெற்றி கிடைத்தாலும்.
கண்டிப்பு அனைவருக்கும் கசக்கும்
எதிர்காலம் சிறப்பாக அமைந்தாலும்
ஏற்காதவை என நினைப்பதுதான்
தேவையாய் இருக்கிறது வாழ்க்கைக்கு
ஏற்று கொண்டு வாழ்ந்துவிட்டால்
வாழ்க்கையை வழக்கில்லாமல்
செலுத்தி விடலாம் ! |
||||||||
Not necessary but need | ||||||||
by Dhamotharan.S on 27 Jan 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|