|
||||||||
தமிழ் மாநில காங்கிரசின் அரசியல் வரலாறு |
||||||||
தமிழ் மாநில காங்கிரசு அல்லது தமிழ் மாநில காங்கிரஸ் தமாக 1996-2002ல் தமிழ்நாட்டில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சி. தோற்றம்: 1996 சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் தேசியத் தலைவர் பி. வி. நரசிம்ம ராவ் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தார். ஆனால் காங்கிரசின் தமிழ் நாட்டு உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களில் பெரும்பாலானோர் இதனை எதிர்த்தனர். ஜி. கே. மூப்பனார் தலைமையில் பிரிந்து சென்று ”தமிழ் மாநில கட்சியின் சின்னம்: சின்னம் மிதிவண்டி சைக்கிள் ஆகும். அரசியல் நிகழ்வுகள்: தமாக 1996 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 39 இடங்களில் வெற்றி பெற்றது. இத்தேர்தலுடன் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுகவுடன் இணைந்து போட்டியிட்டு 20 இடங்களில் வென்றது. 1996-98 காலகட்டத்தில் ஐக்கிய முன்னணி கூட்டணி அரசுகளில் அங்கம் வகித்தது. இக்கட்சியின் ப.சிதம்பரம், எம். அருணாச்சலம், தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோர் மத்திய அமைச்சர்களாகப் பணியாற்றினர். 1998 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. ஆனால் 3 இடங்களில் மட்டுமே வென்றது. புதிய கூட்டணி: 1999 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடனான கூட்டணி முறிந்து, விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. ஆனால் எந்த தொகுதிகளிலும் வெற்றிபெற வில்லை. 2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகக் கூட்டணியில் இடம்பெற்று 23 இடங்களில் வென்றது. 2001ல் மூப்பனாரின் |
||||||||
by Swathi on 28 Aug 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|