|
||||||||
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் அரசியல் வரலாறு |
||||||||
தமிழக அரசியலில் சினிமாத்துறை செலுத்தும் செல்வாக்கினதும் அதிகாரத்தினதும் இன்னொரு வெளிப்பாடாக இக்கட்சியின் தோற்றமும் அமைந்துள்ளது. தோற்றம்: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தமிழ்ப்பட நடிகர் சரத் குமார் தலைமையில் ஆகஸ்ட் 31, 2007 தொடக்கப்பட்ட இந்திய-தமிழக அரசியல் கட்சியாகும். அப்துல் கலாம், காமாராஜ் ஆகியோரின் சிந்தனைகளை, கொள்கைகளை, வழிகாட்டல்களை முன்னெடுத்து இக்கட்சி செயல்படும் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார். கட்சியின் செயல்பாடுகள்: இது நாடார் கட்சி என்று தனிமைபடுத்த நினைக்கிறார்கள். இது அனைத்து சமுதாயத்தினருக்கான கட்சி. காமராஜர் எப்படி அனைத்து மக்களையும் அரவணைத்து சென்றாரோ, எனது தலைமையிலான இந்த கட்சியும் அனைத்து சமுதாயத்தினரையும் அரவணைத்து செல்லும். மீண்டும் காமராஜர் ஆட்சி. இதுவே எங்கள் லட்சியம் என்று முழங்கினார் சரத்குமார். கொள்கைகள்: ஊழல் இல்லாத பாரதம் உருவாக வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி வருவது நமது தேசத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது. எனவே அரசே ஊழலை ஒழிப்பதற்கான சட்டம் இயற்றப்பட்டு கடுமையாகப் பின்பற்றப்படடும், என்று கூறினார். |
||||||||
by Swathi on 28 Aug 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|