LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சிக்கிமின் ரங்போ நகரில் முதல் ரயில் நிலையம்.

திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் 

புதுடெல்லி சிக்கிம் மாநிலத்தில் ரயில்வே நெட்வொர்க் என்பது இல்லாமல் இருந்தது. சிக்கிம் மக்கள் போக்குவரத்துக்குச் சாலை, வான் மார்க்கத்தையே நம்பியிருந்தனர்.

 

ரயில்வே வசதி மட்டும் இல்லாமல் இருந்தது. அந்தக் குறையைப் போக்கும் வகையில் சிக்கிமில் முதல் ரயில் நிலையம் அமைக்கும் திட்டத்தைப் பிரதமர் மோடி 26/02/2024 அன்று தொடக்கி வைத்தார். மூன்று கட்டங்களாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

 

முதலில் செவோக் முதல் ரங்போ வரையிலும், இரண்டாவது கட்டத்தில் ரங்போவில் இருந்து கேங்டாங் வரையிலும், இறுதியாக கேங்டாங்கில் இருந்து நாதுலா வரையும் இந்த ரயில்வே திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

 

இதுகுறித்து திட்ட இயக்குநர் மொகிந்தர் சிங் கூறியதாவது: சிக்கிமின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கட்டிடக்கலையைப் போற்றும் வகையில் முதல் ரயில் நிலையம் அமைக்கப்படும். மேற்கு வங்கத்தில் சிலிகுரிக்கு அருகிலுள்ள செவோக் முதல் சிக்கிமின் ரங்போ வரை 45 கி.மீ. ரயில் பாதை ஒருங்கிணைக்கப் படும். இந்தப் பாதையில், 3.5 கி.மீ. மட்டுமே சிக்கிம் எல்லைக்குள் இருக்கும். எஞ்சிய 41.5 கி.மீ. மேற்கு வங்க எல்லைக்கு உட்பட்டது.

 

110 கி.மீ வேகத்தில் இயக்க முடியும்.

 

14 சுரங்கப் பாதைகள் இந்த ரயில் பாதை திட்டம், 14 சுரங்கப் பாதைகள், 13 பெரிய பாலங்கள், 9 சிறிய பாலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. 86 சதவீதப் பணிகள் சுரங்கம் வழியாகச் செல்வதால் இந்தத் திட்டம் சவாலானதாக உள்ளது.

 

பாறைகள் உடையக்கூடிய தன்மையுடன் காணப்படுவதால் மாதத்துக்கு 15 மீட்டர் அளவில் மட்டுமே சுரங்கம் தோண்டப்படுகிறது. மழைக்காலங்களில் என்எச்-10 சாலையில் அடிக்கடி இடையூறு ஏற்படுவதால் செவோக்-ரங்போ ரயில் பாதை திட்டம் சிக்கிம் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 25 டன் சுமைகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும்.

 

இந்தப் பாதையில் ரயில்களை அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் இயக்க முடியும். மேற்கு வங்கத்தின் ரியாங், டீஸ்டா, மெல்லி ஆகிய மூன்று இடங்களில் ரயில் நிலையம் அமைய உள்ளது. சிக்கிம் மாநிலத்தின் சுற்றுலா மற்றும் பாதுகாப்புக்கு ரங்போ ரயில் நிலையம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இவ்வாறு மொகிந்தர் சிங் கூறினார்.

by Kumar   on 28 Feb 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம். ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம்.
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.