LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

கங்கை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி 114 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவர் மரணம்!

கங்கை நதியின் குறுக்கே உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி 114 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவர் மரணம் அடைந்தார்.

 ஐ.ஐ.டி.யில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சுவாமி ஞானஸ்வரூப் சனந்த்.  இவர் கங்கை நதியை தூய்மைப்படுத்த வேண்டும்,  பாதையில் இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்பது போன்ற  கோரிக்கைகளை வலியுறுத்தி மைத்ரி சதான் ஆசிரமத்தில் கடந்த 114 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

வலுக்கட்டாயமாக அவர் ஆசிரமத்தில் இருந்து தூக்கி வரப்பட்டு எய்ம்ஸ் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், தீவிர சிகிச்சை பலன் அளிக்காமல்   ஞானஸ்வரூப் சனந்த் உயிரிழந்தார். 

கங்கை நதியின் குறுக்கே அமைக்கப்படும் மின் திட்டங்களை கடுமையாக எதிர்த்து வந்த சனந்த், கங்கை பாதுகாப்பு மற்றும் மேலாண்மை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கங்கை நதி வாரிய உறுப்பினராக இருந்த ஞானஸ்வரூப் சனந்த், 2010-ம் ஆண்டில் பகிராதி நதியின் குறுக்கே அமைக்க திட்டமிடப்பட்ட மின் திட்டத்தை எதித்து 38 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அவரது போராட்டத்தை அடுத்து, அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. 

2011-ம் ஆண்டில் கங்கை நதியின் குறுகே உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன், சுவாமி நிகமானந்த் என்பவர் 2 மாதமாக உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.

by Mani Bharathi   on 13 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.