|
||||||||
IIT-JEE-ல் 13வது இடத்தில் மிகவும் பின்தங்கிய இடத்தில் தமிழகம்.. |
||||||||
ஐஐடி கல்வி நிலையங்களில் படிப்பதற்காக நடத்தப்பட்ட IIT-JEE தேர்வு கடந்த மாதம் 6ம் தேதி நடை பெற்றது. இந்திய அளவில் 13 லட்சத்து 60 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்ற இத்தேர்வின் முடிவுகள் 03/05/2014 அன்று வெளியிப்பட்டது. அதில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். நுழைவுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் 2.2 பெற்று தமிழகம் 13வது இடத்தில் உள்ளது.
21,818 மாணவர்கள் தேர்வாகி இந்தப் பட்டியலில் ஆந்திரா முதலிடத்தைப் பெற்றுள்ளது. 19,409 மாணவர்களோடு உத்தரப்பிரதேசம் இரண்டாவது இடத்திலும், 16,867 மாணவர்களோடு ராஜஸ்தான் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
அதற்கடுத்ததாக மகாராஷ்டிராவில் 13,626 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். பீகாரில் 10,987 பேரும், குஜராத்தில் 10,037 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பீகாரை விட மோசமான இடத்தில் தமிழகம் உள்ளது. இதற்கு நம் பாடத்திட்டமே காரணம் என்றும் தமிழக மாணவர்கள் தேசிய அளவில் போட்டிபோடும் திறமையுடன் உருவாக்கப்படாமல் மனப்பாடம் செய்து மதிப்பெண் பெரும் முறையில் படிப்பதே முக்கிய காரணமாகும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். |
||||||||
by Swathi on 07 May 2014 0 Comments | ||||||||
Tags: ஐஐடி IIT-JEE Tamilnadu IIT-JEE Tamilnadu Education | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|