LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    விளையாட்டு-Sports Print Friendly and PDF

மினி உலககோப்பை - ஜிம்பாப்வேவை வீழ்த்தி இலங்கை வெற்றி

நான்காவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்டோபர் 7-ந்தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள போட்டியை நடத்தும் இலங்கையும், ஜிம்பாப்வேயும் விளையாடின. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி, இலங்கையை பேட் செய்ய அழைத்தது. இலங்கையின் தில்ஷானும், முனவீராவும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஜார்விஸ் வீசிய முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து கணக்கைத் தொடங்கினார் முனவீரா. தொடர்ந்து ஆடிய முனவீரா, 17 ரன்களில் ரன் அவுட் ஆனார். மறுபுறம் விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தில்ஷான், 28 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் குவித்தார். அவரது விக்கெட்டை கிரீமர் கைப்பற்றினார். 13 ரன்கள் மட்டுமே எடுத்த கேப்டன் ஜெயவர்தனே ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இறுதியில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. ஜிம்பாப்வே அணியால் 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 100 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இலங்கை அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது இலங்கை அணி சார்பில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய அஜந்தா மென்டிஸ்க்கு வழங்கப்பட்டது.  
 
by Swathi   on 19 Sep 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழக வீரர்கள் இடம்பெறாத டி20 உலகக் கோப்பை இந்திய அணி அறிவிப்பு. தமிழக வீரர்கள் இடம்பெறாத டி20 உலகக் கோப்பை இந்திய அணி அறிவிப்பு.
கேண்டிடேட்ஸ் தொடரில் வென்ற தமிழக வீரர் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகையை முதல்வர் ஸ்டாலின் வழங்கி பாராட்டு. கேண்டிடேட்ஸ் தொடரில் வென்ற தமிழக வீரர் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகையை முதல்வர் ஸ்டாலின் வழங்கி பாராட்டு.
'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் பிரக்ஞானந்தா, வைஷாலி அபாரம் 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் பிரக்ஞானந்தா, வைஷாலி அபாரம்
ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்! ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்!
உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன்
உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு
உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார். உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார்.
உஷாவை  முந்திய  திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி உஷாவை முந்திய திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.