தேவையானவை :
அவல் - 500 கிராம் வெல்லம் – 250 கிராம் நெய் - 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் - ஒரு மூடி துருவியது. ஏலக்காய் - 5
செய்முறை:
1.வெல்லம், ஏலக்காய் ஆகியவற்றை பொடி செய்ய வேண்டும். 2.வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். 3.வெல்லம் கரைந்ததும் எடுத்து மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். 4.வடிகட்டிய வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்கும் போதே ஏலக்காயைப் பொடியை தூவ வேண்டும். 5.மூன்று நிமிடம் கொதித்ததும் அதில் அவலை போட்டு தீயைக் மிதமாக குறைத்து அவல் வேகும் வரை கிளறி விட வேண்டும். 6.அதனுடன் ஒரு கரண்டி நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவல் நன்கு வெந்ததும் அதில் துருவிய தேங்காயைச் சேர்த்து கிளறி விட வேண்டும். 7.பிறகு மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி கிளறி விட்டு 5 நிமிடம் கழித்து இறக்கிப் பரிமாறலாம்
|