இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.அகிர்புதன் மகரிஷி, தேவசிற்பி விஸ்வகர்மா, ஆங்கிரஸ மகரிஷி, அக்னி புராந்தக
மகரிஷி, ஆகியோர் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். இவர்கள் மகாலட்சுமிக்கு தரிசனம் தந்த சகஸ்ரலட்சுமீஸ்வரரை தரிசிக்க மாதம் தோறும்
உத்திரட்டாதி நட்சத்திர நாளில் அரூப வடிவில் இத்தலம் வந்து சிவனை ஹோம பூஜை செய்து வழிபட வருவதாக ஐதீகம். எனவே உத்திரட்டாதி நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள், தங்கள் வாழ்நாளில் அடிக்கடியோ, உத்திரட்டாதி நட்சத்திரத்திலோ வழிபாடு செய்ய வேண்டிய தலம் இது.இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ,
தங்களது நட்சத்திர நாளில் இத்தலத்தில் ஹோமங்கள் செய்து, நெய், முழு முந்திரி, திராட்சை, தேன், பாதாம்பருப்பு, ஆகியவை கலந்த சர்க்கரைப்பொங்கலை
சிவனுக்கு நைவேத்தியம் செய்து ஏழை மக்களுக்கு அளிப்பது சிறப்பு. இதனால் பணக்கஷ்டம் நீங்கும், தடைபட்ட காரியங்கள் சிறப்பாக நடக்கும் என்பது
நம்பிக்கை.தேவசிற்பி விஸ்வகர்மா, அகிர்புதன், ஆங்கிரஸர், அக்னி புராந்தக மகரிஷிகள் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அகிர்புதன் மகரிஷி, தேவசிற்பி விஸ்வகர்மா, ஆங்கிரஸ மகரிஷி, அக்னி புராந்தக மகரிஷி, ஆகியோர் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். இவர்கள் மகாலட்சுமிக்கு தரிசனம் தந்த சகஸ்ரலட்சுமீஸ்வரரை தரிசிக்க மாதம் தோறும் உத்திரட்டாதி நட்சத்திர நாளில் அரூப வடிவில் இத்தலம் வந்து சிவனை ஹோம பூஜை செய்து வழிபட வருவதாக ஐதீகம்.
எனவே உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் வாழ்நாளில் அடிக்கடியோ, உத்திரட்டாதி நட்சத்திரத்திலோ வழிபாடு செய்ய வேண்டிய தலம் இது.இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் , தங்களது நட்சத்திர நாளில் இத்தலத்தில் ஹோமங்கள் செய்து, நெய், முழு முந்திரி, திராட்சை, தேன், பாதாம்பருப்பு, ஆகியவை கலந்த சர்க்கரைப்பொங்கலை சிவனுக்கு நைவேத்தியம் செய்து ஏழை மக்களுக்கு அளிப்பது சிறப்பு.
இதனால் பணக்கஷ்டம் நீங்கும், தடைபட்ட காரியங்கள் சிறப்பாக நடக்கும் என்பது நம்பிக்கை. தேவசிற்பி விஸ்வகர்மா, அகிர்புதன், ஆங்கிரஸர், அக்னி புராந்தக மகரிஷிகள் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். |