கவுதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
முற்றிலும் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தில் முதல் முதலில் அஜித்துக்கு ஜோடி என கிசுகிசுக்கப்பட்டவர் ஹன்சிகா. ஆனால் ஹன்சிகா அஜித் படத்தில் நான் நடிக்கவில்லை என ட்விட்டரில் கூறியிருந்தார். சிவா படம் என்றாலே தமன்னாதான் ஹீரோயின் என்ற ரீதியில் தமன்னா பெயரும் அடிபட்டது. ஆனால் அவரும் இல்லாமல் விஜய், சூர்யா, விக்ரம் தொடர்ந்து சமந்தா அஜித்துடன் ஜோடியாகிறார் என்ற ரீதியில் கிசுகிசுக்கப்பட்டது.
தற்போது படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிக்க இருப்பதாக ஒரு உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். மேலும் படத்தில் காமெடியானாக மீண்டும் சந்தானம் இணைந்துள்ளதாகவும், ஏ.எம்.ரத்னமே இந்த படத்தை தயாரிக்கப்போவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
|