பெங்களூரு : இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 365 ரன்கள் எடுத்ததுள்ளது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு, 328 ரன்கள் எடுத்திருந்தது. இன்று முதல் இன்னிங்சை தொடர்ந்த நியூசிலாந்து அணி 365 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பின் களமிறங்கிய இந்திய அணிக்கு காம்பிர் 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். தற்போது இந்தியா அணி 55 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. சச்சின் மற்றும் சேவாக் களத்தில் உள்ளனர்.
|