"ஐயா" படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நயன்தாரா.
அதன் பின்னர், ரஜினி, விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ், விஷால், ஆர்யா , ஜீவா என்று எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்து முன்னணி நடிகையானார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் இவரது மார்க்கெட் குறையவில்லை. காரணம், தனது அழகை முறையாக பராமரிப்பதில் அதீத அக்கறை காட்டி வருகிறார் நயன்தாரா.
குறிப்பாக, 'ஆரம்பம்', 'ராஜா ராணி', 'அனாமிகா' படங்களில் நடித்து முடித்த பிறகு சிம்பு, ஜெயம்ரவியுடன் நடித்துக்கொண்டு வருகிறார். இந்த இடத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, இப்போது தனது உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நயன்தாரா, அடிக்கடி ஆயுர்வேத குளியல் போடுகிறாராம். இதன்காரணமாக, அவரது உடலும், தோலும் மினுமினுப்பு குறையாமல் இருக்கிறதாம். இதற்காகவே மாதாமாதம் ஒரு பெரிய தொகையை செலவு செய்கிறாராம் நயன்தாரா.
அட இதுதான் நயன்தாரா இளமை ரகசியமா......
|