காமெடி நடிகர் வடிவேலுவை தொடர்ந்து சந்தானமும் டிவிட்டரில் இணைந்துள்ளார்.
திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், தொழில் பிரபலங்கள் என மாறிமாறி தற்போது சமூக வலைதளங்களில் குடியேறி வருகின்றனர். முன்பெல்லாம் ஏதாவது ஒரு விஷயம் குறித்து நடிகர்களின் கருத்தை அறிய அவர்கள் வீட்டுக்குப் போய்க் காத்திருக்க வேண்டிய நிலையில் இருந்தது.
தற்போதெல்லாம் நிலைமை மாறி விட்டது. டுவிட்டர் அல்லது ஃபேஸ்புக் இவற்றில் ஏதாவது ஒன்றில் நடிகர், நடிகைகள் அக்கவுண்ட் வைத்து அதன் மூலமாக தங்களை பற்றிய விவரங்களை போட்டி போட்டுக்கொண்டு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட நகைச்சுவை நடிகர் வடிவேலு டுவிட்டரில் தன்னை இணைத்துக் கொண்டார். அந்த வகையில் இப்போது வடிவேலுவைத் தொடர்ந்து நகைச்சுவை நடிகர் சந்தானமும் டுவிட்டரில் தனக்கான அக்கவுண்டை ஆரம்பித்துள்ளாராம். twitter.com/iamsanthanam என்பது தான் அவரது ட்விட்டர் அக்கவுன்ட்.
|