|
|||||
அரிசி அல்வா |
|||||
தேவையானவை : பச்சரிசி மாவு : 2 கப்
நெய் : 1/2 கப்
வெல்லம் : 11/2 கப்
முந்திரி, ஏலப்பொடி சிறிதளவு
செய்முறை:
1.அரிசிமாவுடன் தண்ணீர் சேர்த்து தோசைமாவு பதத்திற்கு நன்றாக கரைத்து கொள்ளவும்.
2.சிறிதளவு நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து எடுத்து வைக்கவும்.
3.ஒரு கனமான பாத்திரத்தில் கடலைபருப்புடன் மூன்று கப் தண்ணீர் சேர்த்து திடமான பதத்தில் வேகவைத்து எடுக்கவும் .
4.பருப்பு வெந்தவுடன் அதில் அரிசிமாவுக் கரைசலை ஊற்றி கிளறிக்கொண்டே இருக்கவும்.
5.வெல்லத்துடன் தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டவும். இந்த வெல்லத்தண்ணீரை சிறிது நேரம் அடுப்பில் வைத்து கொதிக்கவைத்து வெந்த அரிசிமாவுடன் சேர்த்துக் கிளறவும்.
6.முந்திரி , ஏலப்பொடி, நெய் சேர்த்து கிளறி விடவும்.
7.பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்பொழுது இறக்கிவிடவும்.
8.ஒரு அகலமான பாத்திரத்தில் நெய் தடவி அதில் இந்த பச்சரிசி ஹல்வாவை ஊற்றவும். ஆறியவுடன் பரிமாறவும்.
|
|||||
by Arul Jothi on 17 May 2012 1 Comments | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|