|
||||||||
நெல்லிக்காய் துவையல் (amla thuvaiyal) |
||||||||
தேவையானவை: நெல்லிக்காய் - 1 கிலோ கடுகு - 3 டீஸ்பூன் வெந்தயம் - 1 டீஸ்பூன் பெருங்காயம் - 1 டீஸ்பூன் மிளகாய்தூள் - சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு - தேவையான அளவு மஞ்சள்தூள் - சிறிது எண்ணை - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - சிறிதளவு செய்முறை:- 1.முதலில் நெல்லிக்காயை ஆவியில் 10 நிமிடங்கள் வேக வையுங்கள். 2.பிறகு அவற்றை எடுத்து ஆறவிட்டு, லேசாக அழுத்தினால் துண்டுகளாகப் பிரிந்து கொட்டை வெளியே வந்து விடும். 3.வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் வறுத்து, நன்றாக பொடிக்க வேண்டும். 4.எண்ணையை காயவைத்து, கடுகு தாளித்து, நெல்லிக்காய் துண்டுகளைச்சேருங்கள். 5.அத்துடன் மஞ்சள்தூள், உப்பு, சேர்த்து 5 நிமிடங்கள் வதக்க வேண்டும். பிறகு மிளகாய்த்தூள், வறுத்து பொடித்த தூள், எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து, 5 நிமிடங்கள் நன்றாகக் கிளறி இறக்க வேண்டும். |
||||||||
by vani on 06 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|