|
||||||||
புளிக்காய்ச்சல் (tamarind gravy) |
||||||||
தேவையானவை : புளி - 1 (ஆரஞ்சு பழ அளவு) வெந்தயம் - 1/2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 6 உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் கடுகு - 1/4 டீஸ்பூன் பெருங்காயம் - சிறு துண்டு செய்முறை :
1.முதலில் ஒரு கப் தண்ணீரில் புளியை கரைத்து வடி கட்டிக் கொள்ளவும்.ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் வெந்தயத்தை வறுத்து எடுத்துக் கொள்ளவும். 2.அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மூன்று வற்றல் மிளகாய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.வறுத்த வெந்தயம், மிளகாயுடன் சிறிது உப்பு சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ளவும். 3.ஒரு வாணலியில் அரை கரண்டி நல்லெண்ணெய் விட்டு, சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மீதமுள்ள மிளகாய், பெருங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.பின் கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.புளித்தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், செய்து வைத்திருக்கும் வெந்தயப் பொடியில் பாதியை அதில் போட்டு மேலும் கொதிக்க விடவும். 4.மிதமான தீயில் அடுப்பை வைத்து மேலும் 25 நிமிடங்கள் புளி வாசனை போகக் கொதித்து கெட்டியானவுடன் அடுப்பிலிரிந்து இறக்கவும். |
||||||||
Tamarind Gravy | ||||||||
Ingredients for Tamarind gravy : Tamarind - 1 (orange fruit sized), Fenugreeks - 1/2 Tsp, Dry Chilies - 6, Urad Dal - 1 tsp, Bengal Gram - 1 Tsp, Mustard - 1/4 Tsp, Asafoetida - Little. Method to make Tamarind Gravy : 1. Soak the tamarind in a cup of water. Take the extract keep it aside. Fry the fenugreeks in a heated dry pan. 2. Heat oil in a frying pan add 3 dry chilies and fry it well. Mix up the salt, fried fenugreeks and chilies and powder it well. 3. Heat gingili oil in a frying pan then add mustard, urad dal, bengal gram and dry chilies , asafoetida and fry it well. Then add tamarind extract and boil it well. Then add 1/2 part of fenugreek powder in it and allow it to boil well. 4. In a low heat, boil it for 25 minutes. Boil it till the tamarind green smells out. Turn off the stove. Tamarind Gravy is ready to serve. |
||||||||
by Shiva on 21 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|