|
||||||||||||||||||
சிக்கன் மஞ்சூரியன் ட்ரை (chicken manchurian dry) |
||||||||||||||||||
தேவையானவை: எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ ரெட் கலர் - 1 சிட்டிகை மைதாமாவு - 2 டீஸ்பூன் முட்டை - 1 சோளமாவு - 4 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது - 3/4 டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 வெங்காயம் - 1 சிறியது குடமிளகாய் - 1 சிறியது வெங்காயத்தாள் -4 சோயாசாஸ் - 1 டேபிள்ஸ்பூன் உப்பு+எண்ணெய் = தேவைக்கு செய்முறை: 1.சிக்கனை சுத்தம் செய்து அதில் உப்பு+மைதாமாவு+சோளமாவு+இஞ்சி பூண்டுவிழுது+ரெட் கலர்+மிளகாய்த்தூள் கலந்து 1/2 மணிநேரம் ஊறவைத்து எண்ணெயில் பொரிக்கவும். 2.பிறகு வெங்காயம்+பச்சை மிளகாய்+குடமிளகாய்+வெங்காயத்தாள் அனைத்தையும் பொடியாக அரியவும். 3.கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்+பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். 4.பின் குடமிளகாய் போட்டு லேசாக வதங்கியதும் சோயா சாஸ் ஊற்றவும்.உப்பு சேர்க்கவும்.பின் பொறித்த சிக்கனை போட்டு கிளறி .வெங்காயத்தாள் தூவி இறக்கவும். |
||||||||||||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|