|
||||||||||||||||||
கறி சுக்கா வறுவல்(meat cukka roast ) |
||||||||||||||||||
தேவையானவை : கறி - ஒரு கிலோ வெங்காயம் - இரண்டு சீரகத்தூள் - அரை டீஸ்ஸ்பூன் மிளகாய்த்தூள் - இரண்டு டீஸ்ஸ்பூன் தனியாத்தூள் - இரண்டு டீஸ்ஸ்பூன் இஞ்சி விழுது - ஒரு டேபிள் ஸ்பூன் பூண்டு- ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு- ஒரு டீஸ்ஸ்பூன் கறிவேப்பிலை- ஒரு கொத்து உப்புத்தூள்- ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சத்தூள்- ஒர் டீஸ்ஸ்பூன் எண்ணெய் - அரை கோப்பை காய்ந்த மிளகாய் - 4 செய்முறை : 1.சிறிய துண்டுகளாக்கிய கறியை உப்பு ஒரு டீஸ்ஸ்பூன், மஞ்சத்தூள் அரைத்டீஸ்ஸ்பூன், போட்டு ஒரு கப் தண்ணீரை ஊற்றி தண்ணீர் சுண்டும் வரை வேகவைக்க வேண்டும். 2. வாணலியில் எண்ணெய்யை ஊற்றி கடுகு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை,இரண்டு துண்டு பட்டை, ஆகியவற்றை போட்டு வறுக்கவும்.பிறகு பொடியாக அரிந்த வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வறுக்கவும். 3.வெந்த கறியை அதில் போட்டு நன்கு வதக்கவும்.பிறகு இஞ்சி பூண்டு, மற்றும் எல்லாத்தூளையும், போட்டு உப்புத்தூளையும் போட்டு நன்கு வறுக்கவும்.பச்சை வாசனை நீங்கும் மட்டும் நன்கு கிளறிவிட்டு இறக்கிவிடவும். |
||||||||||||||||||
by kavitha on 08 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|