|
||||||||||||||||||
மட்டன் யாழ்பாண வறுவல்(Mutton Yalpana Fry) |
||||||||||||||||||
தேவையானவை : மட்டன் -500 கி சின்ன வெங்காயம் -20 தக்காளி- 2 பச்சை மிளகாய் -2 கருவேப்பிலை, கொத்தமல்லி -சிறிதளவு எண்ணெய் -50 கி தனியா தூள் -1 டேபிள் ஸ்பூன் உப்பு -தேவையான அளவு பட்டை -1 கிராம்பு -1 சோம்பு -அரை டேபிள் ஸ்பூன் சிரகம் -அரை டேபிள் ஸ்பூன் அரைக்க: மஞ்சள் தூள் -அரை டேபிள் ஸ்பூன் சோம்பு -அரை டேபிள் ஸ்பூன் சீரகம் -அரை டேபிள் ஸ்பூன் கசகசா -1 டேபிள் ஸ்பூன் இஞ்சி -சிறிது பூண்டு -8 பல் வறுத்து தூள் செய்ய: மிளகாய் -10 சீரகம் -அரை டேபிள் ஸ்பூன் சோம்பு -அரை டேபிள் ஸ்பூன் பட்டை -1 ஏலக்காய் -1 மேற்கண்ட அணைத்தையும் சிறிது எண்ணெயில் வறுத்து தூள் செய்ய வேண்டும். செய்முறை : 1.முதலில் அரைத்த தூளை கறியுடன் சேர்ந்த்து பிசறவும்.சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சிறிது சிறிதாக அரியவும். 2.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, சீரகம் ஆகியவற்றை தாளிக்கவும். 3.அரிந்த வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை கடாயில் போட்டு வதக்கவும்.பிறகு கறி கலவையை சேர்க்கவும். 4.கறியில் உள்ள நீர் வற்றியவுடன் உப்பு, தனியா தூள், சிறிது தண்ணீர் சேர்த்து வேக விட வேண்டும். 5.கறியில் உள்ள நீர் வற்றியவுடன் தூள் செய்தவற்றை சேர்த்து தீயை குறைத்து பத்து நிமிடம் கிளறி இறக்கவும். |
||||||||||||||||||
by nandhini on 09 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|