|
||||||||||||||||||
சிக்கன் எக் பெப்பர் சாப்ஸ் |
||||||||||||||||||
தேவையானவை : சிக்கன் - அரை கிலோ முட்டை - 4 சாம்பார் வெங்காயம் - 100 கிராம் இஞ்சி - சிறு துண்டு பூண்டு - 6 பல் காய்ந்த மிளகாய் - 4 தனியா - ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு - இரண்டு ஸ்பூன் கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு உப்பு, எண்ணெய் - தேவையான அளவு செய்முறை : 1. சிக்கனைச் சுத்தம் செய்துக் கொள்ளவும். வேக வைத்த முட்டையை இரண்டாக வெட்டி மஞ்சள் கருவை நீக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். 2. தனியா, மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, வெங்காயம் ஆகியவற்றை வறுத்து அரைத்துக் கொள்ள வேண்டும். 3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மற்றும் கறிவேப்பிலையை போட்டுத் தாளிக்கவும். 4. அரைத்த மசாலாவை அதனுடன் சேர்க்கவும். சிக்கனைச் சேர்த்து சிறிது நீர் ஊற்றி வேக விட வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். 5. சிக்கனும் மசாலாவும் சேர்ந்து கெட்டியானதும், வெட்டி வைத்த முட்டையையும் சேர்த்துக் கிளற வேண்டும். 6. குறைந்த தீயில் இந்த சாப்ஸை வைத்து சில நிமிடங்கள் கழித்துக் கிளறி இறக்கினால் சிக்கன் எக் பெப்பர் சாப்ஸ் தயார். |
||||||||||||||||||
Chicken Egg Pepper Suace | ||||||||||||||||||
INGREDIENTS for Chicken Egg Pepper Sauce: Chicken-1/2 kg Egg-4 Small Onion-100g Ginger-small piece Garlic-6 Dry Chilly-4 Coriander Powder-1tbsp Pepper-2tbsp Mustard, Curry Leaves-for frying Salt, Oil-Enough needed PROCEDURE to make Chicken Egg Pepper Sauce: 1. Clean the chicken finely. Slice the boiled egg in to half and remove the yellow part and keep aside. 2. Roast the coriander powder, dry chilly, ginger, garlic, pepper, onion and grind them well. 3. Heat the oil in a pan, season mustard and curry leaves. 4. Mix the grinded masala with chicken and boil them along with water. Add salt as it enough needed. 5. When chicken and masala comes in a thick consistency, add the egg and stir them. 6. Slow the flame for few minutes and keep aside from stove. Tasty chicken egg pepper sauce is ready. |
||||||||||||||||||
by on 23 Aug 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|