ஆறாவது ஐபிஎல் தொடரின் 18 வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் டிராவிட் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 18.5 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை எடுத்தது. பின்னர் 125 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
|