LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

இந்தியாவுக்கு மகுடம் சூட்டிய பிரக்ஞானந்தா

 

அசர்பைஜான் நாட்டில் நடைபெற்ற செஸ் உலகக் கோப்பையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 206 வீரர்கள் பங்கேற்றனர். இதில் இந்தியாவிலிருந்து பிரக்ஞானந்தா உட்பட 10 வீரர்கள் பங்கேற்றனர். 206 வீரர்களுமே உலகத் தரவரிசையில் முன்னணியில் இருப்பவர்கள்தான். எனவே, இத்தொடரில் இந்தியர்கள் கடும் போட்டியை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எதிர்பார்த்தது போலவேசெஸ் விளையாட்டில் உலகின் தலைசிறந்த போட்டியாளர்கள் பங்கேற்கும் தொடராக இது இருந்தது. இந்திய வீரர்களான குகேஷ், அர்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி, பிரக்ஞானந்தா ஆகியோர் ஐந்தாவது சுற்றுக்கு முன்னேறினர். இதில், பிரக்ஞானந்தா மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார். தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் காருணாவுடனான போட்டி கடுமையாக இருந்த நிலையில், இறுதியில் அவரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் பிரக்ஞானந்தா.
இறுதிப் போட்டி டை-பிரேக்கர் வரை சென்றது. ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாக செஸ் உலகில் ஆதிக்கம் செலுத்திவரும் கார்ல்சன், பிரக்ஞானந்தாவை வென்று கோப்பையும் தங்கப் பதக்கத்தையும் பெற்றார். கார்ல்சன் ஐந்து முறை உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றிருந்தாலும், முதல் முறையாக செஸ் உலகக் கோப்பையில் இப்போதுதான் வெல்கிறார். அதுவும் 32 வயதில்தான் சாதிக்க முடிந்திருக்கிறது. ஆனால், பிரக்ஞானந்தா 18 வயதிலேயே இறுதிப் போட்டி வரை சென்று வெள்ளிப் பதக்கம் பெற்றுத் திரும்பியிருக்கிறார்
அடுத்த சாம்பியன்?
செஸ் உலகக் கோப்பையில் இரண்டாம் இடத்தைப் பிடித்ததன்மூலம் அடுத்த ஆண்டு கனடாவில் நடைபெற உள்ள கேண்டிடேட்ஸ் தொடருக்கு பிரக்ஞானந்தா முன்னேறியிருக்கிறார். இது 2024 உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கான சவாலைத் தீர்மானிக்கும் வகையில் எட்டு வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் தொடர்.
இத்தொடருக்கு இதுவரை தகுதி பெற்றுள்ள ஐந்து வீரர்களில் பதின்ம வயதில் இருக்கும் ஒரே வீரர்
பிரக்ஞானந்தா மட்டுமே. அது மட்டுமல்ல, ஆனந்துக்குப் பிறகு கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதிபெற்ற முதல் இந்தியரும் பிரக்ஞானந்தாதான். அடுத்தடுத்து பெரிய உலக செஸ்தொடர்களில் பங்கேற்கும் வாய்ப்பைப்பெறும் பிரக்ஞானந்தா, அவருடைய பயிற்சியாளர் சொன்னது போல விரைவில் உலக செஸ் சாம்பியனாக உருவெடுப்பார் என்பதில் ஐயமில்லை. தமிழ்நாட்டின் பெருமையாக மிளிரும் பிரக்ஞானந்தாவுக்கு முன்கூட்டிய வாழ்த்துகள்!

அசர்பைஜான் நாட்டில் நடைபெற்ற செஸ் உலகக் கோப்பையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 206 வீரர்கள் பங்கேற்றனர். இதில் இந்தியாவிலிருந்து பிரக்ஞானந்தா உட்பட 10 வீரர்கள் பங்கேற்றனர். 206 வீரர்களுமே உலகத் தரவரிசையில் முன்னணியில் இருப்பவர்கள்தான். எனவே, இத்தொடரில் இந்தியர்கள் கடும் போட்டியை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்த்தது போலவேசெஸ் விளையாட்டில் உலகின் தலைசிறந்த போட்டியாளர்கள் பங்கேற்கும் தொடராக இது இருந்தது. இந்திய வீரர்களான குகேஷ், அர்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி, பிரக்ஞானந்தா ஆகியோர் ஐந்தாவது சுற்றுக்கு முன்னேறினர்.

இதில், பிரக்ஞானந்தா மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார். தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் காருணாவுடனான போட்டி கடுமையாக இருந்த நிலையில், இறுதியில் அவரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் பிரக்ஞானந்தா.

இறுதிப் போட்டி டை-பிரேக்கர் வரை சென்றது. ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாக செஸ் உலகில் ஆதிக்கம் செலுத்திவரும் கார்ல்சன், பிரக்ஞானந்தாவை வென்று கோப்பையும் தங்கப் பதக்கத்தையும் பெற்றார். கார்ல்சன் ஐந்து முறை உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றிருந்தாலும், முதல் முறையாக செஸ் உலகக் கோப்பையில் இப்போதுதான் வெல்கிறார். அதுவும் 32 வயதில்தான் சாதிக்க முடிந்திருக்கிறது. ஆனால், பிரக்ஞானந்தா 18 வயதிலேயே இறுதிப் போட்டி வரை சென்று வெள்ளிப் பதக்கம் பெற்றுத் திரும்பியிருக்கிறார்.

அடுத்த சாம்பியன்?

செஸ் உலகக் கோப்பையில் இரண்டாம் இடத்தைப் பிடித்ததன்மூலம் அடுத்த ஆண்டு கனடாவில் நடைபெற உள்ள கேண்டிடேட்ஸ் தொடருக்கு பிரக்ஞானந்தா முன்னேறியிருக்கிறார். இது 2024 உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கான சவாலைத் தீர்மானிக்கும் வகையில் எட்டு வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் தொடர்.இத்தொடருக்கு இதுவரை தகுதி பெற்றுள்ள ஐந்து வீரர்களில் பதின்ம வயதில் இருக்கும் ஒரே வீரர்பிரக்ஞானந்தா மட்டுமே. அது மட்டுமல்ல, ஆனந்துக்குப் பிறகு கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதிபெற்ற முதல் இந்தியரும் பிரக்ஞானந்தாதான். அடுத்தடுத்து பெரிய உலக செஸ்தொடர்களில் பங்கேற்கும் வாய்ப்பைப்பெறும் பிரக்ஞானந்தா, அவருடைய பயிற்சியாளர் சொன்னது போல விரைவில் உலக செஸ் சாம்பியனாக உருவெடுப்பார் என்பதில் ஐயமில்லை. தமிழ்நாட்டின் பெருமையாக மிளிரும் பிரக்ஞானந்தாவுக்கு முன்கூட்டிய வாழ்த்துகள்!

 

by Kumar   on 02 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.