LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

டவர் இல்லாமல் செல்போன் இயங்கும் வாய்ப்பு - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்

அடுத்த விண்வெளி புரட்சியில் டவர்கள் இல்லாமல் செல்போன்கள் இயங்கும் வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
***************************
தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக  கோவை வந்த இஸ்ரோ முன்னாள் இயக்குநர், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜப்பானில் இளைஞர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் அந்நாட்டில் பணியாற்ற இந்திய இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.
************************
நிலவில் இருந்து சில டன் கனிமங்கள் 
************************
அவற்றை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அடுத்து விண்வெளி புரட்சி வருகிறது. செல்போன் டவர் இல்லாத வகையில், செயற்கை கோள்களால் இயங்கும் அடுத்த தலைமுறை கைபேசி வரக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. குலசேகரபட்டினத்தில் அமையும் ஏவு தளம் உலகின் மிகச் சிறந்த மையமாக அமையும்.
**********************
வர்த்தக ரீதியில் தினம் தினம் ராக்கெட் அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்படும். நிலவை நோக்கிய பயணங்கள் பல மாற்றங்களை ஏற்படுத்த உள்ளன. அடுத்த கட்ட ஆராய்ச்சி நிலவை மையமாக வைத்து இருக்க வேண்டும். நிலவில் இருந்து சில டன் கனிமங்கள் எடுத்து வந்தாலே பெரிய நாடுகளுக்கு எரிசக்தி கொடுக்க வாய்ப்பு உள்ளது.
*******************
விண்வெளி மையம் 
***************************
விண்வெளி சார்ந்த பாடப்பிரிவுகள் அதிகம் வர வேண்டும். சந்திரயான் வெற்றியை சர்வதேச நாடுகள் உன்னிப்பாக கவனிக்கின்றன. விண்வெளி சார்ந்த இந்தியாவின் முயற்சிகள் சிக்கனமாகவும் சிறப்பாகவும் உள்ளன. விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விமான பயணத்தை மாற்ற முடியும்.
*********************
நிலவுக்கு செல்லும் திட்டத்தில் அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நிலவில் சந்திரயான் 3 இறங்கிய இடத்திலேயே விண்வெளி மையம் அமைக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளோம். அது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

by Kumar   on 15 Nov 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.