|
||||||||
பசும்பால் வேறு ! பசுப்பால் வேறு ! |
||||||||
புல் பச்சையாக இருக்கிறது. எப்படிச் சொல்கிறோம் ? பசும்புல்.
கிளி பச்சையாக இருக்கிறது. எப்படிச் சொல்கிறோம் ? பசுங்கிளி.
நெற்கதிர் முற்றாமல் பச்சையாக இருந்தால் பசுங்கதிர்.
பச்சைப்புற்கள் மூடிய தரை பசுந்தரை.
உருக்கிக் கலக்காத தூய்மையான பத்தரை மாற்றுத் தங்கம் பசும்பொன்.
ஆனால், பசு தரும் பாலை எப்படிச் சொல்கிறோம் ? பசும்பால்.
இது தவறு. காய்ச்சப்படாத பச்சைப் பாலைத்தான் பசும்பால் என்று சொல்லவேண்டும். சற்றுமுன் கறந்த தூய்மையான பால் என்ற பொருளிலும் பசும்பால் என்று சொல்லலாம், பசும்பொன் என்பதைப்போல. ஆனால், பசும்பால் என்பது பசுவின் பால் என்ற பொருளைத் தராது.
பசுவிடம் கறந்த பால் என்பதைச் சொல்ல பசுப்பால் எனல் வேண்டும். பசுவின்கண் கறந்த பால் - ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை !
ஆக, பசும்பால் வேறு ! பசுப்பால் வேறு !
நன்றி : கவிஞர் மகுடேசுவரன்
புல் பச்சையாக இருக்கிறது. எப்படிச் சொல்கிறோம் ? பசும்புல். கிளி பச்சையாக இருக்கிறது. எப்படிச் சொல்கிறோம் ? பசுங்கிளி. நெற்கதிர் முற்றாமல் பச்சையாக இருந்தால் பசுங்கதிர். பச்சைப்புற்கள் மூடிய தரை பசுந்தரை. உருக்கிக் கலக்காத தூய்மையான பத்தரை மாற்றுத் தங்கம் பசும்பொன். ஆனால், பசு தரும் பாலை எப்படிச் சொல்கிறோம் ? பசும்பால். இது தவறு. காய்ச்சப்படாத பச்சைப் பாலைத்தான் பசும்பால் என்று சொல்லவேண்டும். சற்றுமுன் கறந்த தூய்மையான பால் என்ற பொருளிலும் பசும்பால் என்று சொல்லலாம், பசும்பொன் என்பதைப்போல. ஆனால், பசும்பால் என்பது பசுவின் பால் என்ற பொருளைத் தராது. பசுவிடம் கறந்த பால் என்பதைச் சொல்ல பசுப்பால் எனல் வேண்டும். பசுவின்கண் கறந்த பால் - ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை ! ஆக, பசும்பால் வேறு ! பசுப்பால் வேறு ! - கவிஞர் மகுடேசுவரன்
|
||||||||
by Swathi on 26 Nov 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|