LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

நடிகர் விஜயகாந்த், சிரஞ்சீவிக்குப் பத்ம விருதுகள்: தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர்களுக்கும் விருதுகள்

விஜயகாந்த், சிரஞ்சீவி, மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர்களுக்கும் 2024 ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது.

 

கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், சமூக சேவை, வர்த்தகம், தொழில்துறை போன்ற அனைத்துத் துறைகளில் தனித்துவமான மற்றும் சிறப்பான/ சாதனைகள் / சேவைகளுக்காக மத்திய அரசு சார்பில் பத்மஸ்ரீ ,பத்ம பூஷண் , பத்ம விபூஷண், ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

 

அதன்படி 2024 ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுக்குத் தேர்வு பெற்றவர்களுக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கி கவுரவிப்பார்.

 

கோவை மாவட்டம் தசாம்பாளையத்தைச்சேர்ந்த பத்திரப்பன், வள்ளி கும்மியாட்ட நடனத்தில் பெண்களுக்குப் பயிற்சி அளித்துப் பங்கேற்க வைத்தவர். இந்திய வரலாறு குறித்து நடனம் மூலம் எடுத்துரைத்தவர்.

 

பத்மஸ்ரீ:

 

1) பத்ரப்பன் - வள்ளி கும்மியாட்ட நடன ஆசிரியர்.

2) பார்பதி பரூவா: இந்தியாவின் முதல் பெண் யானைப் பாகன்

3) ஜெகேஷ்வர் யாதவ்: பழங்குடியின நலச் சமூக சேவகர்.

4) சாமி முர்மு: சுற்றுச்சூழல், பெண்கள் மேம்பாடு

5) குர்மீந்தர் சிங்: சமூக சேவை.

6) சத்யநாராயணனா பெலேரி : பாரம்பரிய நெல் விவசாயம்.

7) சங்கதன் ஹிமா : சமூக சேவை.

8) ஹேம்சந்த் மஞ்சி: பாரம்பரிய மருத்துவம்.

9) துஹ்குமஞ்சி: மேற்குவங்கப் பழங்குடியின மேம்பாடு.

10) கே. செல்லம்மாள்: தெற்கு அந்தமான்: இயற்கை விவசாயம்.

11) யனுங்க் ஜமோலிகோ: மூலிகை மருத்துவம்.

12) சோமன்னா : பழங்குடியினர் நலச் சமூக சேவை.

13) சர்பேஷ்வர் பசுமத்ரி : மலைவாழ் விவசாயம்.

14) பிரேமா தன்ராஜ்: சமூக சேவை, நெகிழி மறுசுழற்சி.

15) உதய் விஸ்வநாத் தேஷ்பாண்டே: சர்வதேச விளையாட்டு மல்லர் ஹம்.

16) யாஸ்தி மேனக்சா இட்டாலியா: மைக்ரோ பயாலாஜிஸ்ட் (நுண்ணறிவியல்)

17) ஷாந்தி தேவி பஸ்வான்: சமூக சேவகி.

18) ரத்தன் கஹர்: நாட்டுப்புறப் பாடகர்.

19) அசோக்குமார் பிஸ்வாஸ்: பெயிண்டர்.

20) பாலகிருஷ்ணன் சதானம்: புதிய வீட்டில் கல்லுவாளி கதக்ளி கலைஞர்.

21) உமா மகேஷ்வரி: முதல் பெண் ஹரிகதா விரிவுரையாளர்.

22) கோபிநாத் ஸ்வைன்: பாடகர் கிருஷ்ணலீலா

23) ஸ்மிருதி ரேகா சத்மா: திரிபுரா நெசவாளர்

24) ஓம்பிரகாஷ் சர்மா: பாரம்பரிய நடனக் கலைஞர். (மால்வா பிராந்தியம்)

25) நாராயணன்: கண்ணுர்: நாட்டுப்புற நடனக் கலைஞர்.

26) பகபத் பதன் : நிருத்தியா நடனக் கலைஞர்.

27) சனாதன் ருத்ரபால்: பாரம்பரியச் சிற்பி.

28) ஜோடான் லெப்சா: மூங்கில் கைவினைஞர்.

29) மச்சிஹான் சாசா: மண்பாண்டக் கலைஞர்.

30) காடம் சம்மையா: சிந்து நாடகக் கலைஞர்.

31) ஜான்கிலால்: பில்வாரா: பெஹூரூபியா கலைஞர்.

32) தாசரி கொண்டப்பா: வீணை கலைஞர்.

33) பாபுராம்யாதவ்: பித்தளை பொருள் கைவினை கலைஞர்.

34) நோபள் சந்திர சுத்ராதர் : மூன்றாம் தலைவர் முகமூடி தயாரிப்பாளர். உள்ளிட்ட 110 பேருக்குப் பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

35 )ஜோஷ்னா சின்னப்பாவிற்குப் பத்மஸ்ரீ விருது

36) எழுத்தாளர் ஜோடி குரூஸ்-க்கு பத்மஸ்ரீ விருது

37) நாச்சியார், சேஷம்பட்டி சிவலிங்கம்- பத்மஸ்ரீ விருது

 

பத்மவிபூஷண் விருது

 

1. வெங்கையா நாயுடு( ஆந்திரா) வுக்கு பத்மவிபூஷண் விருது

2. பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியத்திற்கு(தமிழ்நாடு) பத்மவிபூஷண் விருது

3. நடனக் கலைஞர் வைஜெயந்திமாலாவுக்கு( தமிழ்நாடு) பத்மவிபூஷண் விருது

4. நடிகர் சிரஞ்சீவிக்கு (ஆந்திரா) பத்மவிபூஷண் விருது

5. சமூக சேவகி பிண்டேஸ்வர் பதக்( பீகார்) பத்ம விபூஷன் விருது

 

பத்மபூஷண் விருது

 

தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது

 

1. கோர்முஸ்ஜி என்.காமா ( மகாராஷ்டிரா)- கல்வி மற்றும் இலக்கியம்

2. இந்திநடிகர் மிதுன் சக்கரவர்த்தி ( மேற்குவங்கம்) நடிகர்

3. சீதாராம் ஜிண்டால் (கர்நாடகம் )வர்த்தக ம் மற்றும் தொழில் துறை

4. யங் லியூ (தைவான் )வர்த்தக ம் மற்றும் தொழில் துறை

5. அஸ்வின் பாலசந்த் மேத்தா ( மகாராஷ்டிரா) மருந்தகம்

6. ஸ்ரீ சத்யபிரதா முகர்ஜி ( மேற்கு வங்கம்) மக்கள் தொடர்பு

7. ஸ்ரீ ராம் நாயக் (மகாராஷ்டிரா) மக்கள் தொடர்பு

8. தேஜாஸ் மதுசூதன் படேல் (குஜராத்) மருந்தகம்

9. வளஞ்சேரி ராஜகோபால் ( கேரளா) மக்கள் தொடர்பு

10. தத்தாத் ரேயே அம்பதாஸ் ராஜ்தத் ( மகாராஷ்டிரா) கலை

11. டாக்டான் ரிங்போச் ( லடாக்) ஆன்மிகம்

12. ஸ்ரீ பியாரிலால் சர்மா ( மகாராஷ்டிரா) கலை

13. சந்திரேஸ்வர் பிரசாத்தாகூர் (பீகார்) மருந்தகம்

14. பின்னணிப் பாடகி உஷா துப்பிற்குப் பத்மபூஷன் விருது

15. குந்தன் வியாஸ் ( மகாராஷ்டிரா) கல்வி மற்றும் இலக்கியம்,இதழியல்.

by Kumar   on 29 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம். ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம்.
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.