|
|||||
பச்சரிசி ஹல்வா |
|||||
தேவையானவை : பச்சரிசி மாவு : 2 கப்
வெல்லம் : 1 1/2 கப்
கடலை பருப்பு : 1 கப்
முந்திரி, ஏலப்பொடி சிறிதளவு
நெய் : 1/2 கப்
செய்முறை:
1.அரிசிமாவுடன் தண்ணீர் சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும்.
2.சிறிதளவு நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து எடுத்து வைக்கவும்.
3.ஒரு கனமான பாத்திரத்தில் கடலைபருப்புடன் மூன்று கப் தண்ணீர் சேர்த்து ஓரளவுக்கு திடமான பதத்தில் வேகவைத்து எடுக்கவும் அதில் அரிசிமாவுக் கரைசலை ஊற்றி கிளறிக்கொண்டே இருக்கவும்.
4.வெல்லத்துடன் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டவும். இந்த வெல்லத்தண்ணீரை சிறிது நேரம் அடுப்பில் வைத்து கொதிக்கவைத்து வெந்த அரிசிமாவுடன் சேர்த்துக் கிளறவும்.
5.பிறகு முந்திரி , ஏலப்பொடி, நெய் சேர்த்து கிளறி விடவும்.பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்பொழுது இறக்கிவிடவும்.
6.ஒரு அகலமான பாத்திரத்தில் நெய் தடவி அதில் இந்த பச்சரிசி ஹல்வாவை ஊற்றவும். ஆறினதும் பரிமாறவும்.
|
|||||
by Arul Jothi on 17 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|