LOGO

வரலாற்றில் இன்று-[ 29 ஏப்ரல் 2024]

புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம் இன்று..

புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் ஏப்ரல் 29, 1891 அன்று பாண்டி ச்சேரியில் (புதுச்சேரியில்) பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் தம்பதி யினருக்கு மகனாக பிறந்தார். இவரு க்கு இவரது பெற்றோர் சுப்புரத்தினம் என்றே பெயரி ட்ட‍னர். (பின்னாளில் பாரதியார் மீது கொண்ட அளவற்ற‍ அன்பால் சுப்புரத்தினம் என்ற தமது பெயரை பாரதிதாசன் என்றே மாற்றிக் கொண் டார்).  இளம் வயதிலேயே பிரெஞ்சு மொழி வழி பள்ளியில் பயில நேர்ந்தாலும் தமிழ்மீது கொண்ட தீராக காதலால் தமிழ்ப் பள்ளியிலேயே பயில விரும்பியதால், இவரை இவரது பெற்றோர் தமிழ் பள்ளியி லேயே சேர்த்த‍னர்.  தமிழ்ப் மொழிப் பற்றும் தமழறிவும் சிறந்து விளங்கினார்  பதினெட்டாவது வயதிலேயே கல்லூரியில் தமிழா சிரியாராக பணியமர்த்த‍ப்பட்டார். 1920 ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்ற பெண்மணி யை மணந்து இல்ல‍ற வாழ் வை தொடங்கினார்.

நல்ல‍ இசை ஞானமும் நல்ல‍ தமிழுணர்வும் அவரிடம் இருந்த தால், பல‌ கவிதைகளை படைத்தார்.  சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்க ளை அழகாகவும் நகைச்சுவையுடனும் எழுதித் தமது நண்பர்களுக்குப் பாடிக் காட்டுவார். ஒரு சமயம் இவரது நண்பர் ஒருவரது திருமண விருந்தில் பாரதியார் பங்கேற்றி ருப்ப‍தை அறியாத இவர், பாரதி யாரால் இயற்ற‍ப்பட்ட‍ நாட்டுப் பாடலையே தமது நண்பருக்கு பாடிக் காட்டினார். அந்த விருந்தில் பங்கேற்று இருந்த பாரதி யாரை இவர் பாடி ய விதம் கவர்ந்தது. அப்பாடல் மூலமாகவே பாரதியாருக்கு பாரதி தாசனை அறி முகம் செய்து வைத்தது.

அன்றுமுதல் பாரதியாருடன் இணைந்து, மக்க‍ளுக்கு எழுச்சி யூட்டு ம் பல்வேறு பாடல்களையும், கவிதைகளையும் பாரதி தாசன் இயற்றிப் பாடினார். மேலும் பல்வேறு நூல் களையும் படைத்து அன்னைத் தமிழுக்கு பெருமைகள் பல சேர்த்தார். பாரதி யாரின் மறைவுக்கு பிறகும் தொடர்ந்து வீறு கொண்டு, பாரதியார் காட்டிய சீரான பாதையிலே சென்று தமிழுக்கும் தமிழனுக்கும் தொண்டாற்றினார். முதலில் ஆத்திகனாக இருந்த இவர், பின் நாத்திகனாக மாறினார்.

த‌னது வாழ்நாளில் பெரும்பகுதியை, சமூக விழிப்புணர்வுக் காகவும் செலவழித்த‍ பாவேந்தர் பாரதிதாசன் 21.4.1964 ஆண்டு காலமானார்.

சர்வதேச நடன தினம்

சர்வதேச நடனக் கமிட்டி, யுனெஸ்கோ மற்றும் சர்வதேச திரையரங்க நிறுவனம் ஆகியவை இணைந்து இத்தினத்தை 1982ஆம் ஆண்டுமுதல் ஏப்ரல் 29 அன்று கொண்டாடுகிறது. ஏப்ரல் 29 அன்றுதான் ஜூன் ஜார்ஜ்ஸ் நோவீர் (Jean – Georges Noverre) என்ற நடனக் கலைஞர் பிறந்த நாளாகும். நடனத்தின் மூலம் பாலியல் வேறுபாட்டைப் போக்கி சமத்துவத்தைக் கொடுக்கலாம் என யுனெஸ்கோ தெரிவிக்கிறது.

இரசாயன ஆயுதங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலக தினம்

இரசாயண ஆயுதங்களை பயன்படுத்துதல் என்பது மனித குலத்திற்கு எதிரான ஒரு வருந்தத்தக்க குற்றம் என இரசாயன ஆயுதங்கள் தடை அமைப்பு கூறுகிறது. சிரியா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதால் பலர் உயிர் இழந்தனர். இரசாயன ஆயுதங்களால் உயிர் இழந்தவர்களை நினைவு கூறுவதற்காக 1997இல் இருந்து இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

ரவிவர்மா பிறந்த தினம்

ராஜா ரவிவர்மா 1848 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 அன்று கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள கிளிமானூர் என்னும் ஊரில் பிறந்தார் . எண்ணெய் வண்ண ஓவியக்கலையை 9 ஆண்டுகள் பயின்றார் . தியோடோர் ஜென்சன் என்னும் ஐரோப்பியரிடம் ஐரோப்பா தைல வண்ணக் கலையைக் கற்றுக்கொண்டார் . சென்னை ஆளுராக இருந்த பக்கிங்ஹாம் பிரபுவை அவர் ஓவியமாக வரைந்தது அவருக்குப் புகழைத் தேடித்தந்தது . 1873 இல் வியன்னாவில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் ரவிவர்மாவின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு சிறப்பான விருதைப் பெற்றார் . பழம்பெரும் காவிய நாயகிகளான துஷ்யந்தை , சகுந்தலை , தமயந்தி போன்றோரின் உருவங்களை வரைந்து உலகப்புகழ் பெற்றார் . இவர் நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தினார் .

  • Follows us on
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • youtube
Thirukkural Mobile App
ValaiTamil Academy
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com
நாணய மாற்றம் நாணய மாற்றம் உலக நேரம் உலக நேரம்
 பங்கு வர்த்தகம் பங்கு வர்த்தகம்  தமிழ் காலண்டர் தமிழ் காலண்டர்
Banner Ads

சற்று முன் [ Latest Video's ]

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இலவசத்  திருக்குறள் முற்றோதல் பயிற்சி - நாள்  1100  அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இலவசத் திருக்குறள் முற்றோதல் பயிற்சி - நாள் 1100
133 பேர் 133 திருக்குறள் அதிகாரங்களை மனனமாக முற்றோதல் செய்தல்  133 பேர் 133 திருக்குறள் அதிகாரங்களை மனனமாக முற்றோதல் செய்தல்
  "இன்றைய சூழலில் மாணவச் செல்வங்களை உயர்த்தக் கூடியது திருக்குறளே" || திருக்குறள் முழக்கப் போட்டி
இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின்   இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் "19ஆம் ஆண்டு மார்கழி இசைவிழா" - நாள் 4
இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின்   இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் "19ஆம் ஆண்டு மார்கழி இசைவிழா" - நாள் 3