LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- தென்கிழக்கு ஆசியா

பஹ்ரைன் மனாமா: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் சார்புக்குழுமமான பஹ்ரைன் தமிழ் மங்கையர்கள் குழு, வெள்ளிக்கிழமை பல்லாங்குழி தொடர்போட்டி நடைபெற்றது

பஹ்ரைன் மனாமா: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் சார்புக்குழுமமான பஹ்ரைன் தமிழ் மங்கையர்கள் குழு, வெள்ளிக்கிழமை மார்ச் 8ம் தேதி, இந்தியன் கிளப் வளாகத்தில் அமைந்துள்ள ஔவையார் கல்விக்கூடத்தில்  மாபெரும் பல்லாங்குழி தொடர்போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது. குழுவின் அமைப்பாளர் அனிதா கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பஹ்ரைன் வாழ் தமிழ் பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். முதல் போட்டியை குழுவின் ஆதரவாளர்களான சுபியா இணையதுல்லா மற்றும் கலைவாணி விவேகானந்தன் தொடங்கிவைத்தனர்.

பல சுற்றுக்களாக நடைபெற்ற தொடர்போட்டியில் முதல் பரிசை சாந்தி ஜெயராம், இரண்டாம் பரிசை ப்ரியா மோகன் மற்றும் மூன்றாம் பரிசை பிருந்தா செந்தில்குமார்  ஆகியோர் வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த மாதம் நடைபெறும் பஹ்ரைன் தமிழ் மங்கையர்கள் குழுவின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில் பரிசுகள் வழங்கப்படுகின்றது. மேலும் கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதல் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர். பெ. கார்த்திகேயன் “தமிழர் பண்பாட்டில் பல்லாங்குழி ஆட்டம் என்பது பெண்களின் கணித திறமையை வளர்பதற்கும் நினைவாற்றலை மேன்படுத்துவதர்க்கும் பயன்படுவதோடு ஒரு இடத்திலிருக்கும் குவிந்திருக்கும் செல்வதை எடுத்து அனைவருக்கும் பகிர்தளித்தல் என்ற கோட்பாடையும் வலியுறுத்துகிறது. அனைத்து தொன்மையான கலாச்சாரங்களில் இதை பற்றிய தகவல்கள் உள்ளது, குறிப்பாக எகிப்து பிரமிடுகளின் பல்லாங்குழியின் படங்கள் வரையப்பட்டுள்ளன” என்று கூறினார்.

பஹ்ரைன் தமிழ் மங்கையர்கள் குழுவின் அமைப்பாளர் அனிதா கார்த்திகேயன் பேசும்போது “நமது தமிழ் பெண்கள் மறந்த மறந்துகொண்டிருகின்ற பல கலாசார விளையாட்டுக்கள் நமது குழுவின் மூலம் மீட்டுக்க தொடர்ந்து பல நிகழ்சிகளை முன்னெடுப்போம்” என்று கூறினார். அரபு நாடுகளிலேயே பல்லாங்குழி தொடர்பான முதல் நிகழ்வு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

குறிப்பு: செய்தி பதிவிட்ட பின் அதன் இணைப்பு அல்லது பதிவிட்டதை உறுதிப்படுத்துமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

 

நன்றிகளுடன்,

மதன் குமார் செல்லம்

ஊடகத்துறை - செயலாளர்

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்

+973 38838046

by Swathi   on 15 Mar 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA. செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.