|
|||||
புதிய புயல் 'தித்லி' 24 மணி நேரத்தில் தீவிரமாகும்: வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்! |
|||||
தித்லி புயல் 24 மணி நேரத்தில் தீவிரமாகும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது. வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியது. புதிய புயலுக்கு இந்திய வானிலை மையம் தித்லி என்று பெயர் சூட்டியுள்ளது. இந்தப் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. வங்கக்கடலில் ஒடிசா, கோபால்பூருக்கு 530 கி.மீ தொலைவிலும், கிலிங்கப்பட்டிணத்திற்கு 480 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறும் போது,"புதுச்சேரியில் வரும் 24 மணி நேரத்திற்கு மித மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது. மத்திய, வங்க அரபிக்கடலுக்கு அக்.13ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார். கடலூர், நாகை, பாம்பன் துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டு உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களிலும் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. |
|||||
by Mani Bharathi on 10 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|