|
|||||
விக்ரம் படத்தில், கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் !! |
|||||
ஷங்கரின் ஐ படத்தை தொடர்ந்து, விக்ரம் நடித்து வரும் படம் பத்து எண்றதுக்குள்ள. இந்த படத்தை கோலிசோடா இயக்குனர் விஜய் மில்டன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மேலும் இந்த படத்தில், பசுபதி மற்றும் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்களாம். இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். விறுவிறுப்பாக நடை பெற்றுவரும் இந்த படத்தின் முதல் கட்ட படபிடிப்பை, சமீபத்தில் நேபாளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடத்தியுள்ளர்கலாம். அடுத்த கட்ட படபிடிப்பை நவம்பர் 23-ம் தேதி கோயம்புத்தூரில் தொடங்கவுள்ளனர். இப்படத்தில் முக்கிய காட்சியாக அதிவேக கார் சேசிங் காட்சிகள் படமாக்கப்படவுள்ளது. இதற்காக விஸ்வரூபம் படத்திற்கு ஸ்டண்ட் அமைத்த லீ வைட்டேகர், அதி நவீன கார்களை பயன்படுத்துவது பற்றி இந்தியாவின் நெ.1 கார் பந்தய வீரரான நரைன் கார்த்திகேயனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும் நரைன் கார்த்திகேயனையும் இந்த படத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறதாம். |
|||||
by Swathi on 20 Nov 2014 0 Comments | |||||
Tags: Paththu Endrathukulle Vikram Narain Karthikeyan விஜய் மில்டன் பத்து எண்றதுக்குள்ள | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|