LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

மிரட்டல்-திரை விமர்சனம்

நடிப்பு : வினய், பிரபு, சர்மிளா, சந்தானம், பாண்டியராஜன்
இசை : பிரவீண் மணி
ஒளிப்பதிவு : டி.கண்ணன்
இயக்கம் : மாதேஷ்
தயாரிப்பு : மீடியா ஒன் குளோபல்

 

தெலுங்கில் வெளிவந்த தீ (Dhee) என்ற படத்தை மறுபடியும் தமிழில் ‘மிரட்டல்’ என்ற பெயரில் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மாதேஷ். விஜயகாந்தை வைத்து இயக்கிய அரசாங்கம் என்ற படத்துக்குப் பிறகு சில ஆண்டு இடைவெளியில் அவர் இயக்கியுள்ள படம் இது.

 

மென்மையான வேடங்களில் நடித்து வந்த வினய், இதில் Action ஹீரோவாக நடித்துள்ளார். நடிப்பில் பெரிதாக கூறும்படி ஒன்றும் இல்லை.தங்கை சர்மிளா மீது உயிரையே வைத்திருக்கும் பாசக்கார, ஆனால் மெகா தாதா பிரபு. தன் நண்பனான பாண்டியராஜனின் மகன் வினய்யை தன்னிடமே அடியாளாக வைத்துக் கொள்கிறார்.

 

மற்றொரு தாதாவான பிரதீப் ராவத்தின் மகனை போட்டுத் தள்ளுகிறார் பிரபு. இதனால் பிரபுவின் தங்கையை கொல்ல அடியாட்களை ஏவுகிறார் பிரதீப். தங்கையைக் காக்கும் பொறுப்பை வினய்யிடம் ஒப்படைக்கிறார் பிரபு. காப்பாற்றும் பொறுப்பேற்ற வினய்யுடன் காதலில் விழுகிறார் சர்மிளா.

பிரபுவைப் பார்க்கும் போது மட்டும் காதலை காட்டிக் கொள்வதில்லை. சர்மிளாவை வேறு மாப்பிள்ளைக்குக் கட்டி வைக்க பிரபு முயற்சி செய்ய, ஒரு நாள் ஓடிப் போய் பழனியில் திருமணம் செய்து கொள்கிறார்கள். இதற்கு வினய்யின் பெற்றோரும் உடந்தையாக நிற்கின்றனர். திருமணம் முடிந்த அடுத்த நிமிடமே பிரபுவின் எதிரிகள் சர்மிளாவை கொலை செய்ய முயற்சிக்கின்றனர், அதிலிருந்து காப்பாற்றுகிறார் வினய். காப்பாற்றி முடிக்கும்போது, சரியாக பிரபு வந்து நிற்கிறார்.

 

உடனே திருமணத்தை மறைத்து, தானே காப்பாற்றியதாக சொல்லிவிடுகிறார் வினய். தில்லுமுல்லு தொடர்கிறது. தானும் சர்மிளாவும் கணவன் மனைவி என்ற உண்மையை பிரபுவுக்கு சொன்னாரா? இருவரும் இணைந்தார்களா என்பது கிளைமாக்ஸ்.

by Swathi   on 06 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சினிமா விமர்சனம் - J பேபி சினிமா விமர்சனம் - J பேபி
சினிமா விமர்சனம் - 12th ஃபெயில். சினிமா விமர்சனம் - 12th ஃபெயில்.
திருமணமான ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய திரைப்படம் -இறுகப்பற்று திருமணமான ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய திரைப்படம் -இறுகப்பற்று
சினிமா விமர்சனம் - லைசென்ஸ் சினிமா விமர்சனம் - லைசென்ஸ்
நவரசா ஆந்தாலஜி திரைப்பட விமர்சனம் நவரசா ஆந்தாலஜி திரைப்பட விமர்சனம்
சார்பட்டா பரம்பரை திரை விமர்சனம் சார்பட்டா பரம்பரை திரை விமர்சனம்
குழந்தைகள் விரும்பும் டெடி . படத்தின் திரைவிமர்சனம் குழந்தைகள் விரும்பும் டெடி . படத்தின் திரைவிமர்சனம்
களத்தில் சந்திப்போம் களத்தில் சந்திப்போம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.