|
|||||
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க உத்தரவு! |
|||||
சிபிஎஸ்இ கீழ் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு தகவல் தொடர்பு அறிவை மேம்படுத்தும் வகையில், 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ உத்தரவிட்டு உள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் ‘பாஷாசங்கம்’(மொழிக்கான சங்கம்) ஒரு அதிரடி முடிவை எடுத்து உள்ளது. அதாவது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அட்டவணை 8 ல் சேர்க்கப்பட்டு உள்ள 22 மொழிகளை, சிபிஎஸ்இ மாணவ, மாணவியர் அடிப்படை மொழியாக தெரிந்து கொள்ள செய்ய வேண்டும். அந்த மொழிகளை பிரபலப்படுத்துவது, அந்த மொழிகளில் தகவல் தொடர்பு செய்ய குறைந்தபட்சம் 5 வாக்கியங்களை தினமும் பள்ளிகளில் போதிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளது. இதுகுறித்து, அந்தந்த மாநிலத்தின் கல்வித்துறை செயலாளர்களுக்கு பாஷா சங்கம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதேபோல, சிபிஎஸ்இ தலைவருக்கும், கேந்திரிய வித்யாலயா சங்கதனுக்கும் அனுப்பி உள்ளது. இந்த மொழிகள் தவிர வேறு இந்திய மொழிகள் குறித்து கற்றுத் தர ஆசிரியர்களிடம் மாணவர்களோ, பொதுமக்களோ, பெற்றோரோ கேட்கும்பட்சத்தில், குறிப்பிட்ட அந்த மொழியில் தேர்ந்த ஆட்களை அழைத்து வந்து பள்ளி இறைவணக்க நேரத்தில் தினமும் 5 வாக்கியங்கள் சொல்லித் தரலாம். அந்த வகையில் மேற்கண்ட திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் பள்ளிகளை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை தேர்வு செய்து, அந்த பள்ளிகளுக்கு சிறந்த பள்ளிக்கான விருது வழங்க உள்ளது |
|||||
by Mani Bharathi on 01 Dec 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|