LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் ஆளுமைகள் (Thirukkural Scholars)

தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் செயலாளரான சிவராமகிருஷ்ணன் அவர்கள் வயது மூப்பு காரணமாக 08.06.2023 அன்று மாலை காலமானார் அவருக்கு வயது 93

திருநெல்வேலி, தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் செயலர்,சங்கராஸ்ரமம் ஐந்தருவி குற்றாலம் தலைவர் பிரம்மஸ்ரீ ஆ சிவராமகிருஷ்ணன் .அகவை 93 .அன்பு வடிவம் அருள் வடிவமாக மாறப் பெற்றவர். 08/06/23 மாலை 5:38மணிக்கு அருட்பெருஞ்ஜோதியில் கலந்தார்.

தனது 13 வது வயதில் இருந்தே தென்காசி திருவள்ளுவர் கழகத்துடன் தன்னை ஐக்கிய படுத்திக் கொண்டவர்.. 80 ஆண்டுகள் குறள் பணியில், திருவள்ளுவர் கழகத்தின் தொண்டில் தன்னைக் கரைத்துக் கொண்டவர் என்றால் மிகையாகாது.

கடந்த 1953 ஆம் ஆண்டில் தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் துணைச்செயலராகத் தொடங்கி , பின் 1965 இல்செயலராகப் பொறுப்பேற்றார் . முதல் 50 ஆண்டுகளுக்கு மேலாக அதன் செயலராக மிகவும் சுறுசுறுப்பாக புத்தாக்கச் சிந்தனையுடன்செயலாற்றி வந்தார்.

அகவை 93 ...இருந்தாலும் ஒரு இளைஞரை போல் ஓடியாடி சுறுசுறுப்புடன் செயல்படுவார்.. விருந்தோம்பலில் மிகச் சிறந்த ஓங்கிய பண்பாளர். உரிய நேரத்தில் நிகழ்ச்சிகளை தொடங்கி முடிப்பார்.


1987 ஆம் ஆண்டு நடந்த பட்டிமன்றத்தில் குன்றக்குடி அடிகளார் திருக்குறள் முற்றோதலை திருவாசகம் முற்றோதல் செய்வது போல செய்ய வேண்டும் என்று கூறினார் .அது முதல் ,ஆகஸ்ட் மாதம் தமது இல்லமான மேலகரத்தில் முதன்முதலில் திருக்குறள் முற்றோதல் தொடங்கி திருவள்ளுவர் கழகத்தில் நடத்தி வந்தார்.

இவரின் முயற்சியால் 1994 ஆம் வருடம் தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் நூலகம் ஒன்று நிறுவப்பட்டது

அகில இந்திய வானொலி நிலையத்தோடு இணைந்து தென்காசி திருவள்ளுவர் கழகம் தனது ஆண்டு விழாவை கொண்டாடும் மரபினை முதன்முதலாக தொடங்கி வைத்தார். இதனால் தென்காசியில் நடக்கும் நிகழ்வுகளின் பயனை உலகமெங்கும் இருக்கும் தமிழ் மக்கள் அறியவழிவகை செய்யப்பட்டது.

பல்வேறு திருக்குறள் அமைப்புகளிலும் அறக்கட்டளை நிறுவிஅதன் மூலம் பரிசுகளை அளித்து வந்தார்.

தமிழக அரசு தமிழ்ச் செம்மல் விருது உட்பட பல்வேறு அமைப்புகள் இவர் தொண்டினைப் பாராட்டி திருக்குறள் தொண்டர் ,குறள் சித்தர், திருக்குறள் பணிச் செம்மல்,திருக்குறள் பேரொளி, குறள் பயிற்றுச் செம்மல் ,சேவைச் செம்மல் ,இலக்கியச் செம்மல் என்ற விருதுகளை வழங்கிப் பாராட்டியுள்ளன.

உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் சார்பாக எமது அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்..

 

by Swathi   on 09 Jun 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது. அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது.
திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார். திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள் திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள்
மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் 	வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
மலேசியாவில் வெளியிடப்படும்  Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.