LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் செய்திகள் (Thirukkural News )

சமரசம் செய்து கொள்ளாமல் அறம் பேசியதால் தான் திருக்குறளை பேரரசர்கள் எவரும் கொண்டாடவில்லை! ஆர்.பாலகிருஷ்ணன் IAS

சமரசம் செய்து கொள்ளாமல் "அறம்"
பேசியதால் தான் திருக்குறளை பேரரசர்கள் எவரும் கொண்டாடவில்லை!
ஆர்.பாலகிருஷ்ணன் IAS


Marirajan Rajan
கி.பி.8 ஆம் நூற்றாண்டு.
சேரமான் பெருமாள் என்னும் சேரநாட்டு அரசன். இவர் எழுதிய திருக்கைலாய உலா என்னும் நூலில் இரண்டு திருக்குறளை அப்படியே எடுத்தாண்டுள்ளார். திருவள்ளுவரை பண்டையோன் என்று பெருமைபொங்க கூறுவார்.

Sathish Ravichandran
Marirajan Rajan திருக்குறள் எழுதப்பட்ட காலம் என்ன அண்ணே?


Marirajan Rajan
Sathish Ravichandran
சங்க இலக்கியத்திற்கு பின்பு.
பக்தி இலக்கியத்திற்கு முன்பு..
அதாவது கி.பி.2 ஆம் நூற்றாண்டில் திருக்குறள் எழுதப்பட்டது.

Balakrishnan R
Marirajan Rajan மகிழ்ச்சி. இதில் சேரமான் பெருமாள் நாயனார் ஒரு பக்தி இலக்கியப் படைப்பாளி. இதிலும் அவர் ஓர் அரசராக, நாம் இன்று கொண்டாடுவது போல ஒரு அரசியல் பொருளாதார சமூகவியல் வழிகாட்டி நூலாக எந்ந மன்னரும் கொண்டாடவில்லை. ஏனெனில் குறள் கடைசி மனிதனுக்காக வாதிடும் ஒரு கலகக்குரலும் ஆகும்!


Marirajan Rajan
Balakrishnan R
16 ஆம் நூற்றாண்டு.
கொங்குப்பகுதி சிற்றரசர்கள் வள்ளுவரை வெகுவாகப் போற்றியுள்ளனர். இன்று நாம் கொண்டாடுவதை விட
சற்று அதிகமாக செய்துள்ளனர். தாங்கள்
வழங்கிய அரசு ஆவணமான செப்பேடுகளின் துவக்கத்திலேயே வள்ளுவர் இருக்கிறார். ஒரு சிற்றரசனின் மெய்கீர்த்தியே வள்ளுவரை தொடக்கமாக கொண்டுதான் ஆரம்பமாகிறது.
சில உதாரணங்கள்.
சில ஆவணங்கள்...
பழனி வீரமுடியாளர் செப்பேடு....
மதுரைத் திருமலை நாயக்கர் காலத்தில் பழனி சின்னோப நாயக்கர் என்பார் அதிகாரத்தில் பழனியில் வீரமுடியாளர் சார்பில் ஒரு மடம் ஏற்படுத்தப்படுகிறது. சிதம்பர உடையார் சீடன் அலங்காரபண்டாரம் என்பவர் அதன் தலைவராக நியமிக்கப்படுகிறார். மடத்தில் தண்ணீர்ப்பந்தல் வைக்கப்பட்டு உப்பு, ஊறுகாய், நீராகாரம் வைக்கப்படுகிறது.
அந்தச் செப்பேட்டில் பழனி சின்னோப நாயக்கர் மெய்க்கீர்த்தியில்.....
/ 'புகழ்ப்பூண்டு இன்சொல்லால் இனிதளித்து வள்ளுவர் மரபு காத்து முப்பால் மொழியின்படிக்கு
அல்லவை கடிந்து
நல்லவை நாட்டி
கலிமெலியக் குடிதழைக்க
ஆறிலொன்று கடமைகொண்டு அசையாமணிகட்டி அரசாளுநாளில்"/
என்ற தொடர்கள் காணப்படுகின்றன.
திருவள்ளுவர் கூறிய மரபுபடி ஆட்சி செய்தேன் என்கிறார்...
பல்லடம் செப்பேடு..
கொங்குநாட்டு வாரக்க நாட்டில் நாரணபுரம் அங்காள பரமேசுவரி கொடைச் செப்பேட்டில் நாராயண கவுண்டர் அதிகாரம் பேசப்படுகிறது.
/'ஓதி யுணர்ந்து உலகம்முழுதும் ஆளுவதற்கு
நீதி சாகரம் நினைவுடன் கற்று மும்மொழி விநோதன் முத்தமிழ் தெரிந்தோன் வள்ளுவர் மரபுகாத்து முப்பால் மொழியின்படியே அல்லவை கடிந்து நல்லவை நாட்டி "/
என்பன பாளையக்காரர் பற்றிய புகழ் மொழிகளாகும். வள்ளுவர் மரபு காத்து முப்பால் மொழிந்தபடி ஆட்சி செய்வேன் என்கிறார்.
மதுரை முத்துவீரப்ப நாயக்கர் ஆட்சிக்காலத்தில் கொங்கு நாட்டில் பூந்துறை நாட்டுக்கும் காங்கயநாட்டுக்கும் எல்லைப்போர் ஏற்பட்டுத் தாராபுரம் நாயக்கர் அதிகாரி திம்மப்ப முதலியாரால் அவ்வழக்கு தீர்த்து வைக்கப் படுகிறது. அதைக் குறித்து 1617-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தில்
/"சற்குணம் நான்கும்
அழும் குழவிக்கு அன்புடைத் தாய்போல் அனைத்து உயிர்கட்கும் இனிமையே நல்கி வள்ளுவர் உரைத்து முப்பால் மொழியின்படியே செங்கோல் நீதி வழுவாமல் நாட்டி நடத்தி வருகுற நாளில்'/
என்ற தொடர்கள் காணப்படுகின்றன. வள்ளுவன் வழிப்படி செங்கோல் ஏந்தி நீதி வழுவாமல் இருக்கிறேன் என்கிறார்.
பழையகோட்டை ஏடு...
பழைய கோட்டைப் பட்டக்காரர் பயிரன் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் தம்பி கண்ணுச்சாமி என்ற குமார ரத்தினக்கவுண்டர் ஒரு பள்ளி ஏற்படுத்துவதற்காக ஆசிரியர் ஒருவரைத் தேடி திருவாவடுதுறை ஆதினம் சென்று முத்துப்பிள்ளை என்பவரைக் குடும்பத்துடன் அழைத்துக் கொண்டு வந்தார். அதற்காக ஆதினத்து 28 ஏக்கர் நிலம் அளிக்கப்பட்டது.
பழைய கோட்டையில் ஒரு வாரத்தில் 200 சிறுவர்கள் தங்கிப்பயில ஒரு பள்ளி ஏற்படுத்தப்பட்டது. அதைக்குறிக்கும் பாடலில்
அந்தப் பள்ளியில்
சாதிமத பேதமில்லா தமிழ்மறை திருக்குறள் கற்பிக்கப்பட்டதாம்..
இன்னும் இருக்கு சார்.


Balakrishnan R
Marirajan Rajan உண்மை.‌ அதனால் தான் பேரரசர்கள் என்று குறிப்பிட்டேன்.‌ "கொங்குப் புலவர்கள்" பெரிதும் மதிக்கப்பட்டனர். அருமைகாரர் சீர்காரர் இடம் பெறும் கொங்கு மரபு திருமணங்களில் வைதீக மந்திரங்கள் கிடையாது.

Marirajan Rajan
Balakrishnan R
ஆனாலும் ஒரு விடயம் சார்.
16 ஆம் நுற்றாண்டில் இருந்தவர்கள் வள்ளுவருக்கு எந்த ஒரு சமய அடையாளமும் பூசவில்லை.
வள்ளுவர் மரபு காத்து, முப்பால் மொழிந்தவன்,
தமிழ்மறை யாத்தவன்,
மும்மொழி விநோதன்,
முத்தமிழ் தெரிந்தோன்
என்று வள்ளுவர் புகழப்படுகிறார். ஒரு 500 ஆண்டுகளுக்கு முன் வள்ளுவர் காட்டிய அறம் மற்றும் அவரது தமிழ் இவையிரண்டு மட்டுமே வள்ளுவரின் அடையாளமாக இருந்தது.
ஆனால் இன்று..
வள்ளுவர் ஒரு சனாதானி.
அவர் ஒரு கிறித்துவர்.
அவர் ஒரு சமணர்.
அவர் ஒரு பௌத்தர்.
என்ற பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது.
.வள்ளுவனுக்கு
பூணூல் போடுவது காவி சாத்துவது சிலுவை அணிவிப்பது தவைக்குமேலே முக்குடை போடுவது.
இதுகுறித்த நூற்கள் வெளிவருகிறது. வெளியீட்டு விழாவில் தமிழறிஞர்களும் பங்கேற்கின்றனர்.
வருத்தமாக உள்ளதே சார்.

Chinnasamy Rajendiran
Marirajan Rajan முக் குடை 13 ஆம் நூற்றாண்டில் இருந்தே வருகின்றது

Marirajan Rajan
Chinnasamy Rajendiran
அதனால்....?

Chinnasamy Rajendiran
Marirajan Rajan அதனால் ஒன்றுமில்லை.. அவர்கள்தான் தமிழ்ச் சமணர்கள் எம் ஓத்து/ மறை என்று முழங்கினர்.. கொண்டாடினர்
சைவமும் சமணமும் போட்டி போட்டு கொண்டாடினர்
கம்பர் கையில் எடுத்து காவியம் படைத்தார்... கிட்டத்தட்ட 700 குறள்கள் கம்ப இராமாயணத்தில்

Balakrishnan R
Chinnasamy Rajendiran கம்பராமாயணத்தில் 700 குறள்களா!

Chinnasamy Rajendiran
Balakrishnan R ஆம் தண்டபாணி தேசிகர் மற்றும் தெ ஞானசுந்தரம் நூல்களைப் பாருங்கள்
குறள் கருத்துகள் ,குறள் தொடர்கள் , உரிய சொல்லாட்சி, குறள் இறைக் கொள்கை.., இப்படி பலப் பல இடங்களில்
முடிசூட்டு விழாவில் கம்பரின் படைப்பு புரட்சியின் உச்சம்

by Swathi   on 19 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது. அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது.
திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார். திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள் திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள்
மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் 	வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
மலேசியாவில் வெளியிடப்படும்  Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.