LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- சொற்களின் பொருள் அறிவோம்

டேப்லெட் என்பதற்கு வரைப்பட்டிகை என்னும் சொல் சரியா..

தமிழ் அறிஞர் கருணாநிதி முகநூலில் இட்டுள்ள தம் நிலைக்கூற்றில் இந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருப்பதால் எல்லார்க்கும் ஆர்வமும் அக்கறையும். எடுத்த எடுப்பில், இச்சொல் பொருத்தம்தானா என்ற ஐயம் எனக்கும் எழுந்தது. இறங்கி ஆராய்ந்தேன் !
முதலில் ‘வரை’ என்ற சொல்லைப் பற்றிப் பார்ப்போம். வரை என்பதற்கு மலை, வரம்பு, எல்லை ஆகியன நாம் நன்கறிந்த பொருள்கள். அவைமட்டுமல்ல. விரல் அளவு, கோடு, எழுத்து ஆகிய பொருள்களும் காணப்படுகின்றன. ஓவியம் வரைந்தேன்’ என்பதில் வரை என்ற சொல் கோடிழுப்பதைக் குறிக்கிறது. கவிதை வரைந்தேன் என்பதில் வரை என்ற சொல் எழுதியதைக் குறிக்கிறது. அடி உதை என்பன வினைச்சொல்லும் பெயர்ச்சொல்லும் ஆவதுபோல் ‘வரை’ என்ற சொல் வினையும் ஆகும், பெயரும் ஆகும். விரல் அளவிடத்தால் தீண்டப்படும் கோடு, எழுத்து என்ற விரிவில் ‘வரை’ என்ற சொல் மிகப்பொருத்தமே.
அடுத்து பட்டிகையைப் பார்ப்போம். பட்டிகை என்பதற்கு ‘மார்புக்கச்சை, மேகலை, தெப்பம், தோணி, சீந்திக்கொடி, சித்திரக் கம்பி, தாழை ஆகிய பொருள்களுடன் ‘ஏடு’ என்ற பொருளும் உண்டு. அரச பத்திரங்கள் பட்டிகைகள் எனப்பட்டுள்ளன. நாம் ஏடு என்ற பொருளைத் தேர்ந்துகொள்ளலாம். ஏடு என்றால் அது காகிதத்தில் மட்டுமே இருக்கவேண்டியதில்லை. பனையேடு, செப்பேடுகள் உண்டு. எடுபடும் என்பதால் அது ஏடு.
வரைப்பட்டிகை - கோடுகள் எழுத்துகள் எல்லாம் விரல் அளவுக்குள் தோன்றுகின்ற ஏடு’ என்ற பொருள் வருகிறது.
ஆக, டேப்லெட் (Tablet) என்பதற்கு ‘வரைப்பட்டிகை’ என்ற தமிழாக்கம் மிகப் பொருத்தம்தான் ! 
நன்றி : கவிஞர் மகுடேசுவரன்

by Swathi   on 26 Nov 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவைப் போற்றும் 'நடுகல்' திறப்பு விழா - அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை. தாய்லாந்தில் தமிழர்களின் நினைவைப் போற்றும் 'நடுகல்' திறப்பு விழா - அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை.
தமிழ் மாதங்கள் 12 அறிந்ததே. ஆனால், தமிழ் ஆண்டுகள் 60 தெரியுமா? தமிழ் மாதங்கள் 12 அறிந்ததே. ஆனால், தமிழ் ஆண்டுகள் 60 தெரியுமா?
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.