LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் மொழி

தமிழின் பெருமை

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும் உலகப்பார்வையை கொண்டது நமது தமிழ்மொழி. இதில் பழந்தமிழர் வீரம் போற்றும் புறநானூறு, அக வாழ்க்கையை கொண்டாடும் அகநானூறு, இலக்கணம் போற்றும் தொல்காப்பியம் , வாழ்வியல் பேசும் திருக்குறள் என்று அனைத்தையும் கொண்டுள்ள ஒரே மொழி நம் தமிழ் மொழியாகும். தனித்த நம் சித்தர் இலக்கிய அடிப்படையில் உருவான மருத்துவமும் , தனித்துவமான இசையும் , தற்சார்புகொண்ட பண்பாட்டு பின்ணணியும் உடையவர்கள் நாம் என்பதில் பெருமை கொள்வோம். சங்க இலக்கியப் பாடல்கள் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்தும், அதே மொழிநடையில் இன்றும் நம்மால் படித்து புரிந்துகொள்ள முடிகிறது என்றால் அது தமிழுக்கு மட்டுமே உள்ள தகுதியும் சிறப்புமாகும்.

உலகின் எந்த நாட்டிற்குச் சென்றாலும் தமிழ் இனம் தமிழ்ச்சங்கம் அமைத்து , இலக்கியக் குழு, கலைக்குழு , தமிழ்ப்பள்ளிகள் அமைத்து தங்களின் மொழி,கலை,பண்பாட்டை, வாழ்வியலை பாதுகாப்பதிலும், தழைத்தோங்கச் செய்வதிலும் உறுதியாக இருக்கிறோம். எந்த நாட்டிலும் தமிழ்ச்சங்க மேடைகளில் பிறமொழிகள் அனுமதிக்கப்படுவதில்லை . இது பிறமொழி பேசும் அண்டை மாநில மக்களுக்கும் வியப்பைத் தருகிறது.

உலகின் 7102 மொழிகளில் ஏழு மொழிகள் மட்டுமே செம்மொழி மொழிகளாக தகுதி பெற்றுள்ளது. அதில் தமிழ்மொழி மட்டுமே ஒரு செம்மொழிக்காக வரையறுக்கப்பட்டுள்ள 11 தகுதிகளையும் பெற்றுள்ளது என்று பெருமையோடு குறிப்பிடுவோம். தமிழர்களின் உன்னதமான வாழ்வியல் கோட்பாடுகளாக அறம் , பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு நிலைகளை அறிந்து செம்மையாக வாழ்ந்துள்ளனர்.

நம் சங்க இலக்கியங்கள் கற்பனைகள் அல்ல, அவை அந்தந்த காலக்கட்டத்தின் வாழ்வியலை பிரதிபலிப்பவை. சங்க இலக்கியங்களைக் கற்போம். தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம்.

உலகின் இரு மூத்த மொழிகளில் சமஸ்கிருதத்தினுடைய முதல் கல்வெட்டு ராஜஸ்தானத்தினுடைய அத்திப்பாராவிலும் குஜராத்தில் இருக்கிற ஜுனாகடிலும் கிடைத்துள்ளது. அந்த கல்வெட்டின் காலம் கிபி 1-ம் நூற்றாண்டு. அதுபோல் தமிழ் மொழியில் முதல் கல்வெட்டு மதுரையில் மாங்குளத்திலும் தேனியில் புலிமான்கோம்பையிலும் கிடைத்திருக்கிறது.‌ இந்தக் கல்வெட்டின் காலம் கிமு 6-ம் நூற்றாண்டு. இது சுமார் 700 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை தொல்லியல் உறுதிப்படுத்துகிறது.

இதுவரை, இந்தியாவிலே கிமு 6-ம் நூற்றாண்டில் தொடங்கி 18-ம் நூற்றாண்டு வரை 60,000 தமிழ் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. சமஸ்கிருதக் கல்வெட்டுக்களின் எண்ணிக்கை 4000 ஆகும். 

தமிழ் "மக்களின்" மொழி என்பது அனைவருக்கும் பெருமை. காரணம், தமிழ் தோன்றிய காலத்தில் உருவான இலக்கியங்களை இன்றுவரை நம்மால் வாசிக்க முடிகிறது , வாழ்வியலில் கடைபிடிக்க முடிகிறது . அறியப்பட்ட வரலாற்றின்படி, மூவாயிரம் ஆண்டுகளாக தமிழ் மக்களின் மொழியாக இருக்கிறது.

உலகின் எந்த மொழியிலும் பெண் புலவர்கள் , பெண் எழுத்தாளர்கள் , பெண் சிந்தனையாளர்கள் சுட்டிக் காட்டப்படவில்லை. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட தமிழ் இலக்கியத்தில் ஒருவரல்ல, இருவரல்ல 40-க்கும் மேற்பட்ட பெண் புலவர்களைக் கொண்ட ஒரே உலக மொழி தமிழ்.!

இன்றைக்கும் இலங்கையில், சிங்கப்பூரில், மலேசியாவில், மொரீசியஸில், கனடாவில் அரசினுடைய மொழியாக இருக்கிறது. பூவுலகம் முழுக்க இருக்கிற பல நாடுகளில் இருக்கிற 10 கோடி தமிழர்களுடைய மொழி தமிழ்.

அதே போல தமிழினுடைய பெருமை அது ஒரு சமயச் சார்பற்ற மொழி. கீழடியில் 16,000 பொருட்கள் கிடைத்துள்ளன. அதில் ஒரு பொருள் கூட பெரும் மதங்களும் மத நிறுவனம் சார்ந்த பொருள் கிடையாது. ஆனால் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் எழுத்துகள் கிடைத்துள்ளன. கிமு 6-ம் நூற்றாண்டில் பெரும் மதங்களும் பெரும் மதங்களுடைய கடவுள்களும் உருவாவதற்கு முன்பே செழித்தோங்கிய மொழியாக தமிழ் இருந்திருக்கிறது.

தமிழ் நம் தாய்மொழிமட்டுமல்ல, நம் பெருமை, நம் அடையாளம்.

 

by Swathi   on 10 Jan 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவைப் போற்றும் 'நடுகல்' திறப்பு விழா - அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை. தாய்லாந்தில் தமிழர்களின் நினைவைப் போற்றும் 'நடுகல்' திறப்பு விழா - அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை.
தமிழ் மாதங்கள் 12 அறிந்ததே. ஆனால், தமிழ் ஆண்டுகள் 60 தெரியுமா? தமிழ் மாதங்கள் 12 அறிந்ததே. ஆனால், தமிழ் ஆண்டுகள் 60 தெரியுமா?
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.