|
||||||||
ககர இகர வருக்கம் |
||||||||
கிடக்கை யெனும்பெயர் கிளர்புவிப் பெயரும்
சயனமு மென்னச் சாற்றப் பெறுமே. ....492
கிழமை யெனும்பெயர் குணமு முரிமையும்
வாரமு மெனவே வழங்குவர் புலவர். ....493
கிளையெனும் பெயரே மூங்கிலும் சுற்றமும்
கிளைத்தலு மோர்பண் பெயருங் கிளத்துவர். ....494
கிட்டி யெனும்பெயர் தலையீற் றாவும்
தாளமு மெனவே சாற்றுவர் புலவர். ....495
கின்னர மெனும்பெயர் கின்னர மிதுனமும்
யாழின் பெயரு நீர்ப்பறவையு மாந்தையும். ....496
கிடுகெனும் பெயரே தேர்மரச் சுற்றும்
பரிசையு மெனவே பகரப் பெறுமே. ....497
கிளரெனும் பெயரே கிளர்த்தெழு கிரணமும்
கோட்டு மலர்ப்பூந் தாதுங் கூறுவர். ....498
கிஞ்சுக மெனும்பெயர் முண்முருக் குடனே
சென்னிறப் பெயருஞ் செப்பப் பெறுமே. ....499
கிள்ளை யெனும்பெயர் கிளியுங் குதிரையும். ....500
கிருட்டின னெனும்பெயர் கேசவன் பெயரும்
அருச்சனன் பெயரு மாகு மென்ப. ....501
கிருத்திம மெனும்பெயர் தொழிலுஞ் சருமமும்
பூதமும் பொய்யும் புகலப் பெறுமே. ....502
கிம்புரி யெனும்பெயர் கிரீட விகற்பமும்
களிற்றின் மருப்பின் பூணுங் கருதுவர். ....503
கிழியெனும் பெயரே கிழிபடு துகிலும்
இருநிதிப் பெயரு மெழுது படமுமாம். ....504
கிருட்டி யெனும்பெயர் பன்றியின் பெயரும்
ஓரீற் றாவும் உரைக்கப் பெறுமே. ....505
கிடக்கை யெனும்பெயர் கிளர்புவிப் பெயரும் சயனமு மென்னச் சாற்றப் பெறுமே. ....492
கிழமை யெனும்பெயர் குணமு முரிமையும் வாரமு மெனவே வழங்குவர் புலவர். ....493
கிளையெனும் பெயரே மூங்கிலும் சுற்றமும் கிளைத்தலு மோர்பண் பெயருங் கிளத்துவர். ....494
கிட்டி யெனும்பெயர் தலையீற் றாவும் தாளமு மெனவே சாற்றுவர் புலவர். ....495
கின்னர மெனும்பெயர் கின்னர மிதுனமும் யாழின் பெயரு நீர்ப்பறவையு மாந்தையும். ....496
கிடுகெனும் பெயரே தேர்மரச் சுற்றும் பரிசையு மெனவே பகரப் பெறுமே. ....497
கிளரெனும் பெயரே கிளர்த்தெழு கிரணமும் கோட்டு மலர்ப்பூந் தாதுங் கூறுவர். ....498
கிஞ்சுக மெனும்பெயர் முண்முருக் குடனே சென்னிறப் பெயருஞ் செப்பப் பெறுமே. ....499
கிள்ளை யெனும்பெயர் கிளியுங் குதிரையும். ....500
கிருட்டின னெனும்பெயர் கேசவன் பெயரும் அருச்சனன் பெயரு மாகு மென்ப. ....501
கிருத்திம மெனும்பெயர் தொழிலுஞ் சருமமும் பூதமும் பொய்யும் புகலப் பெறுமே. ....502
கிம்புரி யெனும்பெயர் கிரீட விகற்பமும் களிற்றின் மருப்பின் பூணுங் கருதுவர். ....503
கிழியெனும் பெயரே கிழிபடு துகிலும் இருநிதிப் பெயரு மெழுது படமுமாம். ....504
கிருட்டி யெனும்பெயர் பன்றியின் பெயரும் ஓரீற் றாவும் உரைக்கப் பெறுமே. ....505
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|