|
||||||||
சப்பாணிப்பருவம் |
||||||||
421 வீங்குஞ் சுவைச்செங் கழைச்சிலை குழைத்தளி விராயநா ணம்பொருத்தி -
விரைமலர்க் கோலைந்து கொண்டொரு மலர்க்கோல் விரைந்துவிட் டவனுடம்பு,
தேங்குந் தழற்குணவு செய்துபண் டைப்படி திருந்தியோ கத்திருந்த -
செஞ்சடைக் கருமிடற் றுத்தவள நீற்றுத் திருப்பெரும் பரமயோகி,
வாங்குத் திரைக்கடற் புடவிமுத லெத்தலமும் வாழ்வெனும் புணரிமூழ்க -
வணங்கா முடித்தலை வணங்கிட வணக்குகழை வண்சிலையு மலர்வாளியுந்,
தாங்குந் திருக்கைத் தலத்தொளி துளும்பவொரு சப்பாணி கொட்டியருளே -
தண்டமிழ் வளம்பொலி குடந்தைமங் களவல்லி சப்பாணி கொட்டியருளே. (1)
422 ஆக்குந் தொழிற்றமரு கம்புரக் குந்தொழி லமைந்தவப யஞ்சாம்பரா -
வழிக்குந் தொழிற்றீ மறைக்குந் தொழிற்றலை யமைந்தூன்று தாண்மறைப்புப்,
போக்குந் தொழிற்குஞ் சிதத்தா ளிவைந்தும் பொலிந்திடச் சுருதிவாழ்த்தப் -
புன்மையின் றுய்ந்தன மெனச்சகல புவனமும் போற்றெடுத் தேத்தமடமை,
நீக்கும் புலிப்பத முனித்தலைவ னும்பணி நெடுந்தவ முனித்தலைவனு -
நிறைமகிழ் திளைப்பமா தேவன்மன் றிடைநவி னிருத்தக் கியைந்ததாளந்,
தாக்குந் திருக்கைத் தலத்தொளி துளும்பவொரு சப்பாணி கொட்டியருளே
தண்டமிழ் வளம்பொலி குடந்தைமங் களவல்லி சப்பாணி கொட்டியருளே. (2)
423 ஓங்கிய கொடைத்தலைமை பூண்டமை யிரும்புவன முணரவறி குறியமைந்தாங் -
குத்தமோத் தமநீர் பொழிந்துதெய் வப்பசுவி னொண்முலையின் விரல்கள்வாய்ந்து,
தூங்கிய மதுப்பொழி மலர்க்கற் பகத்திற் றுறுந்தளிரி னியல்புபூண்டு -
துங்கமிகு சங்கமும் பதுமமு மிரேகையிற் றோற்றப் புனைந்துகொண்டு,
வீங்கிய கடர்ப்பிழம் பாற்றுணங் கறன்முழுதும் வெய்துவாய்ப் பெய்துதோன்றும் -
வெய்யோன் சமழ்க்குமணி யாழிகள் புனைந்துமழை மேகமுத லாயபலவுந்,
தாங்கிய திருக்கைத் தலத்தொளி துளும்பவொரு சப்பாணி கொட்டியருளே
தண்டமிழ் வளம்பொலி குடந்தைமங் களவல்லி சப்பாணி கொட்டியருளே. (3)
424 புண்ணிய மலிந்தவ ரகக்கணு முகக்கணும் பொங்குகளி தங்குமாறு -
பொன்னஞ் சிலம்புபுனை தாமரை யியங்குகாற் புண்டரிக மலரகத்துங்,
கண்ணிய செழுங்கோக நகமல ரகத்துங் கலந்துமர் நலந்தண்மடவார் -
கைக்கமல மிசைவசிக் குங்கமல மலராய்க் கடற்றானை சுற்றுபுடவி,
யண்ணிய பிலம்புக் கழுந்தப் பரந்தநீர்க் காயநற் றாயாய்ப்பல -
வறங்களுக் குஞ்செவிலி யாய்ப்பொலிந் தச்சமற வபயவர தங்கொடுக்குந்,
தண்ணிய திருக்கைத் தலத்தொளி துளும்பவொரு சப்பாணி கொட்டியருளே
தண்டமிழ் வளம்பொலி குடந்தைமங் களவல்லி சப்பாணி கொட்டியருளே. (4)
425 மையற் றுறைப்படியு மெங்களை யெடுத்தாள வல்லநின் றிருவடிக்கு -
வந்தனம் பற்பல புரிந்தன மினஞ்செயவு வந்தன மதான்றுபோற்று,
கையற் றிருக்குமடர் கூட்டத் துறாதுநிற் கருதுநரை யும்பரசுவோங் -
கங்கையை நினக்கடிமை யென்றுசா தித்தளவில் கலியெடுத் துப்புகலுவோம்,
பையற் றொடுங்குமொரு பாம்பினெம் பொறியறப் பாவைநினை யேகருதுவோம் -
பாடித்துதித்திடுவ மெங்கட்கு நீயினிப் பண்ணுவது நிற்கவின்றுன்,
றையற் றிருக்கை தலத்தொளி துளும்பவொரு சப்பாணி கொட்டியருளே
தண்டமிழ் வளம்பொலி குடந்தைமங் களவல்லி சப்பாணி கொட்டியருளே. (5)
வேறு
426 வழிவழி யடிமை யெமைக்கொண் டாளு மறாக்கரு ணைத்திருவே
மாயா மயகும் பத்து முளைத்தவர் வாமத் தருமையே
கழிமகிழ் சால நினைப்பவ ருள்ளக் கமலத் துறையனமே
கல்லா மூடர் மதிக்கு மினித்துக் கமழும் பைந்தேனே
பழிதபு மறைமுறை யிடவு மதற்கப் பாலா கியகொடியே
பனிவரை யாற்று தவத்தின் முளைத்த பசுங்கிளி யேமயிலே
கொழியருள் வடிவுடை மங்கள நாயகி கொட்டுக சப்பாணி
குடைந்தையுண் மேய மடந்தை பராபரை கொட்டுக சப்பாணி. (6)
427 ஆலம் பொலிதரு கண்டத் தெண்டோ ளாண்டகை யெம்பெருமாற்
கந்தொழி லும்முடன் மேவி யிருந்தினி தாக முடித்திடுவோய்
ஞாலம் பொலிதரு மாருயி ராய நலங்கெழு பைங்கூழ்க
ணன்று விழைந்து தழைந்து பொலிந்திட நக்கெழு பசுமுகிலே
சீலம் பொலிதரு செய்கையி னுள்ளத் திருகற் றுருகிடுவார்
செறிதரு சனனப் பரவை சுவற்றுஞ் செங்கதி ரேயளவாக்
கோலம் பொலிதரு மங்கள நாயகி கொட்டுக சப்பாணி
குடைந்தையுண் மேய மடந்தை பராபரை கொட்டுக சப்பாணி. (7)
428 கரையில தாகிய பரமா னந்தக் கடல்வரு தெள்ளமுதே
கருதிக் கருதி மிகக்குக்ழை வாருட் கழனி யெழுங்கழையே
வரையி னுதித்தொர் மருப்புக் கன்றை யைக்கு மடப்பிடியே
மாறி லவித்தை யிருட்டற வன்பருண் மாமலை யெழுகதிரே
தரைமுதல் பூத்தரு ணன்று பழுத்துத் தழையும் பொற்கொடியே
தானே யாகிய தோன்றாத் துணைமகிழ் தக்க பெருந்துணையே
குரைமறை யோலிடு மங்கள நாயகி கொட்டுக சப்பாணி
குடைந்தையுண் மேய மடந்தை பராபரை கொட்டுக சப்பாணி. (8)
வேறு
429 மடமற நினைபவ ருளமெனு மொருதளி யுற்றவிளக்கேசொன்
மறைமுடி வினுமுணர் வருமொரு முதல்விய ருட்பெருமைத்தேவி
தடநெடு முடியுயர் பனிவரை யிமயமு யிர்த்தமடப்பாவை
தளர்வற வளவில்ப லுயிர்களு மெளிதின ளித்ததிறற்கோதை
படவர வமுமதி யமும்வர நதியுமு டித்தசடைத்தேவர்
படுமத சலவிற லடுகளி றுதவுரி பெற்றபுகழ்த்தூயர்
குடநடு வமர்பவ ரிடமமர் மடமயில் கொட்டுகசப்பாணி
குவலயம் விழைவன விழைவகை யருள்பரை கொட்டுகசப்பாணி. (85)
430 பொன்பொலி பாத மறந்தலை யாவொரு புக்கில மைத்தறியாப்
புன்புலை யேமும் விரும்பிடு மாறருள் புத்தமு தப்பாகே
மின்பொலி வேணியர் பங்கமர் வாய்திரு மெய்த்த வருட்பேறே
வின்பொலி யாவர்க ளுந்தொழ வாழ்வருள் விச்சை யனப்பேடே
தென்பொலி சீதரன் முன்பிற வாதசெ ழித்தசு வைத்தேனே
திங்களை நேர்முக மங்கதின் மானிகர் செப்புவி ழித்தாயே
கொன்பொலி ஞால மலர்ந்த பராபரை கொட்டுக சப்பாணி
கொங்களை வார்குழன் மங்கள நாயகி கொட்டுக சப்பாணி. (10)
421 வீங்குஞ் சுவைச்செங் கழைச்சிலை குழைத்தளி விராயநா ணம்பொருத்தி - விரைமலர்க் கோலைந்து கொண்டொரு மலர்க்கோல் விரைந்துவிட் டவனுடம்பு, தேங்குந் தழற்குணவு செய்துபண் டைப்படி திருந்தியோ கத்திருந்த - செஞ்சடைக் கருமிடற் றுத்தவள நீற்றுத் திருப்பெரும் பரமயோகி, வாங்குத் திரைக்கடற் புடவிமுத லெத்தலமும் வாழ்வெனும் புணரிமூழ்க - வணங்கா முடித்தலை வணங்கிட வணக்குகழை வண்சிலையு மலர்வாளியுந், தாங்குந் திருக்கைத் தலத்தொளி துளும்பவொரு சப்பாணி கொட்டியருளே - தண்டமிழ் வளம்பொலி குடந்தைமங் களவல்லி சப்பாணி கொட்டியருளே. (1)
422 ஆக்குந் தொழிற்றமரு கம்புரக் குந்தொழி லமைந்தவப யஞ்சாம்பரா - வழிக்குந் தொழிற்றீ மறைக்குந் தொழிற்றலை யமைந்தூன்று தாண்மறைப்புப், போக்குந் தொழிற்குஞ் சிதத்தா ளிவைந்தும் பொலிந்திடச் சுருதிவாழ்த்தப் - புன்மையின் றுய்ந்தன மெனச்சகல புவனமும் போற்றெடுத் தேத்தமடமை, நீக்கும் புலிப்பத முனித்தலைவ னும்பணி நெடுந்தவ முனித்தலைவனு - நிறைமகிழ் திளைப்பமா தேவன்மன் றிடைநவி னிருத்தக் கியைந்ததாளந், தாக்குந் திருக்கைத் தலத்தொளி துளும்பவொரு சப்பாணி கொட்டியருளே தண்டமிழ் வளம்பொலி குடந்தைமங் களவல்லி சப்பாணி கொட்டியருளே. (2)
423 ஓங்கிய கொடைத்தலைமை பூண்டமை யிரும்புவன முணரவறி குறியமைந்தாங் - குத்தமோத் தமநீர் பொழிந்துதெய் வப்பசுவி னொண்முலையின் விரல்கள்வாய்ந்து, தூங்கிய மதுப்பொழி மலர்க்கற் பகத்திற் றுறுந்தளிரி னியல்புபூண்டு - துங்கமிகு சங்கமும் பதுமமு மிரேகையிற் றோற்றப் புனைந்துகொண்டு, வீங்கிய கடர்ப்பிழம் பாற்றுணங் கறன்முழுதும் வெய்துவாய்ப் பெய்துதோன்றும் - வெய்யோன் சமழ்க்குமணி யாழிகள் புனைந்துமழை மேகமுத லாயபலவுந், தாங்கிய திருக்கைத் தலத்தொளி துளும்பவொரு சப்பாணி கொட்டியருளே தண்டமிழ் வளம்பொலி குடந்தைமங் களவல்லி சப்பாணி கொட்டியருளே. (3)
424 புண்ணிய மலிந்தவ ரகக்கணு முகக்கணும் பொங்குகளி தங்குமாறு - பொன்னஞ் சிலம்புபுனை தாமரை யியங்குகாற் புண்டரிக மலரகத்துங், கண்ணிய செழுங்கோக நகமல ரகத்துங் கலந்துமர் நலந்தண்மடவார் - கைக்கமல மிசைவசிக் குங்கமல மலராய்க் கடற்றானை சுற்றுபுடவி, யண்ணிய பிலம்புக் கழுந்தப் பரந்தநீர்க் காயநற் றாயாய்ப்பல - வறங்களுக் குஞ்செவிலி யாய்ப்பொலிந் தச்சமற வபயவர தங்கொடுக்குந், தண்ணிய திருக்கைத் தலத்தொளி துளும்பவொரு சப்பாணி கொட்டியருளே தண்டமிழ் வளம்பொலி குடந்தைமங் களவல்லி சப்பாணி கொட்டியருளே. (4)
425 மையற் றுறைப்படியு மெங்களை யெடுத்தாள வல்லநின் றிருவடிக்கு - வந்தனம் பற்பல புரிந்தன மினஞ்செயவு வந்தன மதான்றுபோற்று, கையற் றிருக்குமடர் கூட்டத் துறாதுநிற் கருதுநரை யும்பரசுவோங் - கங்கையை நினக்கடிமை யென்றுசா தித்தளவில் கலியெடுத் துப்புகலுவோம், பையற் றொடுங்குமொரு பாம்பினெம் பொறியறப் பாவைநினை யேகருதுவோம் - பாடித்துதித்திடுவ மெங்கட்கு நீயினிப் பண்ணுவது நிற்கவின்றுன், றையற் றிருக்கை தலத்தொளி துளும்பவொரு சப்பாணி கொட்டியருளே தண்டமிழ் வளம்பொலி குடந்தைமங் களவல்லி சப்பாணி கொட்டியருளே. (5)
வேறு 426 வழிவழி யடிமை யெமைக்கொண் டாளு மறாக்கரு ணைத்திருவே மாயா மயகும் பத்து முளைத்தவர் வாமத் தருமையே கழிமகிழ் சால நினைப்பவ ருள்ளக் கமலத் துறையனமே கல்லா மூடர் மதிக்கு மினித்துக் கமழும் பைந்தேனே பழிதபு மறைமுறை யிடவு மதற்கப் பாலா கியகொடியே பனிவரை யாற்று தவத்தின் முளைத்த பசுங்கிளி யேமயிலே கொழியருள் வடிவுடை மங்கள நாயகி கொட்டுக சப்பாணி குடைந்தையுண் மேய மடந்தை பராபரை கொட்டுக சப்பாணி. (6)
427 ஆலம் பொலிதரு கண்டத் தெண்டோ ளாண்டகை யெம்பெருமாற் கந்தொழி லும்முடன் மேவி யிருந்தினி தாக முடித்திடுவோய் ஞாலம் பொலிதரு மாருயி ராய நலங்கெழு பைங்கூழ்க ணன்று விழைந்து தழைந்து பொலிந்திட நக்கெழு பசுமுகிலே சீலம் பொலிதரு செய்கையி னுள்ளத் திருகற் றுருகிடுவார் செறிதரு சனனப் பரவை சுவற்றுஞ் செங்கதி ரேயளவாக் கோலம் பொலிதரு மங்கள நாயகி கொட்டுக சப்பாணி குடைந்தையுண் மேய மடந்தை பராபரை கொட்டுக சப்பாணி. (7)
428 கரையில தாகிய பரமா னந்தக் கடல்வரு தெள்ளமுதே கருதிக் கருதி மிகக்குக்ழை வாருட் கழனி யெழுங்கழையே வரையி னுதித்தொர் மருப்புக் கன்றை யைக்கு மடப்பிடியே மாறி லவித்தை யிருட்டற வன்பருண் மாமலை யெழுகதிரே தரைமுதல் பூத்தரு ணன்று பழுத்துத் தழையும் பொற்கொடியே தானே யாகிய தோன்றாத் துணைமகிழ் தக்க பெருந்துணையே குரைமறை யோலிடு மங்கள நாயகி கொட்டுக சப்பாணி குடைந்தையுண் மேய மடந்தை பராபரை கொட்டுக சப்பாணி. (8)
வேறு 429 மடமற நினைபவ ருளமெனு மொருதளி யுற்றவிளக்கேசொன் மறைமுடி வினுமுணர் வருமொரு முதல்விய ருட்பெருமைத்தேவி தடநெடு முடியுயர் பனிவரை யிமயமு யிர்த்தமடப்பாவை தளர்வற வளவில்ப லுயிர்களு மெளிதின ளித்ததிறற்கோதை படவர வமுமதி யமும்வர நதியுமு டித்தசடைத்தேவர் படுமத சலவிற லடுகளி றுதவுரி பெற்றபுகழ்த்தூயர் குடநடு வமர்பவ ரிடமமர் மடமயில் கொட்டுகசப்பாணி குவலயம் விழைவன விழைவகை யருள்பரை கொட்டுகசப்பாணி. (85)
430 பொன்பொலி பாத மறந்தலை யாவொரு புக்கில மைத்தறியாப் புன்புலை யேமும் விரும்பிடு மாறருள் புத்தமு தப்பாகே மின்பொலி வேணியர் பங்கமர் வாய்திரு மெய்த்த வருட்பேறே வின்பொலி யாவர்க ளுந்தொழ வாழ்வருள் விச்சை யனப்பேடே தென்பொலி சீதரன் முன்பிற வாதசெ ழித்தசு வைத்தேனே திங்களை நேர்முக மங்கதின் மானிகர் செப்புவி ழித்தாயே கொன்பொலி ஞால மலர்ந்த பராபரை கொட்டுக சப்பாணி கொங்களை வார்குழன் மங்கள நாயகி கொட்டுக சப்பாணி. (10)
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|