LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- சிந்துப்பாவியல்

தாளமுடைய பாடல்களின் வகை

தாள நடையுடைப் பாக்கள், வண்ணம்,
சந்தம், சிந்தே, உருப்படி என்ன
நால்வகை யாக நவிலப் படுமே.
கருத்து : தாள நடையுடன் நிகழும் இசையளவு பாக்கள் வண்ணப் பாக்கள் என்றும் சந்தப்பாக்கள் என்றும், சிந்துப்பாக்கள் என்றும் உருப்படிகள் என்றும் நான்கு வகையாக வழங்கப்படும்.
விளக்கம் : இசையோடு தாளமும் சேர்ந்து நடக்கும் பாடல்கள் இசையளவு பாக்கள் என்பது முன்பு விளக்கப்பட்டது (நூ.2.உரை). அந்த இசையளவுப் பாக்கள் நான்கு வகையாக வழங்கப்படுகின்றன. அவை வண்ணப்பாக்கள், சந்தப்பாக்கள், சிந்துப்பாக்கள், உருப்படிகள் எனபனவாகும்.
காட்டு : வண்ணப்பா
தனனதன தனனதந்தத் தனதானா - என்ற அமைப்புடையது.
இருவினையின் மதிமயங்கித் திரியாதே
எழுநரகி லுழலுநெஞ்சத் தலையாலே
பரமகுரு வருணினைந்திட் டுணர்வாலே
கரவுதரி சனையையென்றற் கருள்வாயே
தெரிதமிழை யுதவுசங்கப் புலவோனே
சிவனருளு முருகசெம்பொற் கழலோனே
கருணைநெறி புரியுமன்பர்க் கெளியோனே
கனகசபை மருவுகந்தப் பெருமாளே! (திருப்புகழ் - 144)
சந்தப்பா
சந்தப்பாக்கள் சந்தப் பாவிற்குரிய சந்தமாத்திரை பெற்றிருக்கும். 
வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப் 
பொய்யொவெனு மிடையாளொடு மிளையானொடும் போனான் 
மையோமர கதமொமறி கடலோமழை முகிலோ 
ஐயோவிவ னழகென்பதோ ரழியாவழ குடையான் (கம் - 1926) 
சிந்துப்பா - நொண்டிச்சிந்து 
உண்டான ஆத்தியெல்லாம் - வீட்டில் 
உடைமை கடமைகளும் உடன்எடுத்துக் 
கொண்டாடிக் கொண்டெழுந்தேன் - பாதை 
கூடித்தென் பூமியை நாடிச் சென்றேன். 
சென்றேன் தலங்களெல்லாம் - பின்னர்ச் 
சிதம்பரத் தையர் பதம்பெறநான் 
நின்றேன் புலியூரில் - தொண்டர் 
நேசிக்கும் சந்நிதி வாசல் வந்தேன் (திரு.நொ.நா.பக்.34, 35) 
உருப்படி 
எடுப்பு 
தெண்டனிட்டேன் என்று சொல்லடி - சுவாமிக்குநான் 
தெண்டனிட்டேன் என்று சொல்லடி. 
தொடுப்பு 
தண்டலை விளங்கும் தில்லை தளத்தில் பொன்னம்பலத்தே 
கண்டவர் மயங்க வேடம் கட்டியாடு கின்றவர்க்குத் (தெண்ட) 
முடிப்பு 
கற்பூர வாசம் வீசும் பொற்பாந் திருமுகத்தே 
கனிந்தபுன் னகையாடக் கருணைக் கடைக்கண் ஆட 
அற்பார்பொன் னம்பலத்தே ஆனந்தத் தாண்டவம் 
ஆடிக்கொண்டே என்னை ஆட்டங்கண் டாருக்குத் (தெண்ட) 
(திருவ - 1602, 1603) 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.