|
||||||||
குதம்பைச் சித்தர் பாடல்கள் |
||||||||
கண்ணிகள்
வெட்ட வெளிதன்னை மெய்யென்று இருப்போர்க்குப்
பட்டயம் ஏதுக்கடி - குதம்பாய்
பட்டயம் ஏதுக்கடி ? 1
மெய்ப்பொருள் கண்டு விளங்கும்மெய்ஞ் ஞானிக்குக்
கற்பங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
கற்பங்கள் ஏதுக்கடி ? 2
காணாமற் கண்டு கருத்தோடு இருப்போர்க்கு
வீணாசை ஏதுக்கடி - குதம்பாய்
வீணாசை ஏதுக்கடி ? 3
வஞ்சகம் அற்று வழிதன்னைக் கண்டோர்க்குச்
சஞ்சலம் ஏதுக்கடி - குதம்பாய்
சஞ்சலம் ஏதுக்கடி ? 4
ஆதாரமான அடிமுடி கண்டோர்க்கு
வாதாட்டம் ஏதுக்கடி - குதம்பாய்
வாதாட்டம் ஏதுக்கடி ? 5
நித்திரை கெட்டு நினைவோடு இருப்போர்க்கு
முத்திரை ஏதுக்கடி - குதம்பாய்
முத்திரை ஏதுக்கடி ? 6
தந்திரமான தலந்தனில் நிற்போர்க்கு
மந்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
மந்திரம் ஏதுக்கடி ? 7
சத்தியமான தவத்தில் இருப்போர்க்கு
உத்தியம் ஏதுக்கடி - குதம்பாய்
உத்தியம் ஏதுக்கடி ? 8
நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு
வாட்டங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
வாட்டங்கள் ஏதுக்கடி ? 9
முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்குச்
சத்தங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
சத்தங்கள் ஏதுக்கடி ? 10
உச்சிக்கு மேற்சென்று உயர்வெளி கண்டோர்க்கு
இச்சிப்பிங்கு ஏதுக்கடி - குதம்பாய்
இச்சிப்பிங்கு ஏதுக்கடி ? 11
வேகாமல் வெந்து வெளியெளி கண்டோர்க்கு
மோகாந்தம் ஏதுக்கடி - குதம்பாய்
மோகாந்தம் ஏதுக்கடி ? 12
சாகாமல் தாண்டித் தனிவழி போவோர்க்கு
ஏகாந்தம் ஏதுக்கடி - குதம்பாய்
ஏகாந்தம் ஏதுக்கடி ? 13
அந்தரந் தன்னில் அசைந்தாடு முத்தர்க்குத்
தந்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
தந்திரம் ஏதுக்கடி ? 14
ஆனந்தம் பொங்கி அறிவோடு இருப்பார்க்கு
ஞானந்தான் ஏதுக்கடி - குதம்பாய்
ஞானந்தான் ஏதுக்கடி ? 15
சித்தரக் கூடத்தைத் தினந்தினம் காண்போர்க்குப்
பத்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
பத்திரம் ஏதுக்கடி ? 16
முக்கோணம் தன்னில் முளைத்தமெய்ஞ் ஞானிக்குச்
சட்கோணம் ஏதுக்கடி - குதம்பாய்
சட்கோணம் ஏதுக்கடி ? 17
அட்டதிக்கெல்லாம் அசைந்தாடும் நாதர்க்கு
நட்டணை ஏதுக்கடி - குதம்பாய்
நட்டணை ஏதுக்கடி ? 18
முத்தி பெற்றுள்ளம் முயங்குமெய்ஞ் ஞானிக்குப்
பத்தியம் ஏதுக்கடி - குதம்பாய்
பத்தியம் ஏதுக்கடி ? 19
அல்லலை நீக்கி அறிவோடு இருப்போருக்குப்
பல்லாக்கு ஏதுக்கடி - குதம்பாய்
பல்லாக்கு ஏதுக்கடி ? 20
அட்டாங்க யோகம் அறிந்தமெய்ஞ் ஞானிக்கு
முட்டாங்கம் ஏதுக்கடி - குதம்பாய்
முட்டாங்கம் ஏதுக்கடி ? 21
வேகம் அடக்கி விளங்குமெய்ஞ் ஞானிக்கு
யோகந்தான் ஏதுக்கடி - குதம்பாய்
யோகந்தான் ஏதுக்கடி ? 22
மாத்தானை வென்று மலைமேல் இருப்போர்க்குப்
பூத்தானம் ஏதுக்கடி - குதம்பாய்
பூத்தானம் ஏதுக்கடி ? 23
செத்தாரைப் போலத் திரியுமெய்ஞ் ஞானிக்கு
கைத்தாளம் ஏதுக்கடி - குதம்பாய்
கைத்தாளம் ஏதுக்கடி ? 24
கண்டாரை நோக்கிக் கருத்தோடு இருப்போர்க்குக்
கொண்டாட்டம் ஏதுக்கடி - குதம்பாய்
கொண்டாட்டம் ஏதுக்கடி ? 25
காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக்
கோலங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
கோலங்கள் ஏதுக்கடி ? 26
வெண்காயம் உண்டு மிளகுண்டு சுக்குண்டு
உண்காயம் ஏதுக்கடி - குதம்பாய்
உண்காயம் ஏதுக்கடி ? 27
மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம்பாய்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி ? 28
பட்டணஞ் சுற்றிப் பகலே திரிவோர்க்கு
முட்டாக்கு ஏதுக்கடி - குதம்பாய்
முட்டாக்கு ஏதுக்கடி ? 29
தாவரமில்லை தனக்கொரு வீடில்லை
தேவாரம் ஏதுக்கடி - குதம்பாய்
தேவாரம் ஏதுக்கடி ? 30
தன்னை அறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்குப்
பின்னாசை ஏதுக்கடி - குதம்பாய்
பின்னாசை ஏதுக்கடி ? 31
பத்தாவுந் தானும் பதியோடு இருப்பார்க்கு
உத்தாரம் ஏதுக்கடி - குதம்பாய்
உத்தாரம் ஏதுக்கடி ? 32
கண்ணிகள்
வெட்ட வெளிதன்னை மெய்யென்று இருப்போர்க்குப் பட்டயம் ஏதுக்கடி - குதம்பாய் பட்டயம் ஏதுக்கடி ? 1
மெய்ப்பொருள் கண்டு விளங்கும்மெய்ஞ் ஞானிக்குக் கற்பங்கள் ஏதுக்கடி - குதம்பாய் கற்பங்கள் ஏதுக்கடி ? 2
காணாமற் கண்டு கருத்தோடு இருப்போர்க்கு வீணாசை ஏதுக்கடி - குதம்பாய் வீணாசை ஏதுக்கடி ? 3
வஞ்சகம் அற்று வழிதன்னைக் கண்டோர்க்குச் சஞ்சலம் ஏதுக்கடி - குதம்பாய் சஞ்சலம் ஏதுக்கடி ? 4
ஆதாரமான அடிமுடி கண்டோர்க்கு வாதாட்டம் ஏதுக்கடி - குதம்பாய் வாதாட்டம் ஏதுக்கடி ? 5
நித்திரை கெட்டு நினைவோடு இருப்போர்க்கு முத்திரை ஏதுக்கடி - குதம்பாய் முத்திரை ஏதுக்கடி ? 6
தந்திரமான தலந்தனில் நிற்போர்க்கு மந்திரம் ஏதுக்கடி - குதம்பாய் மந்திரம் ஏதுக்கடி ? 7
சத்தியமான தவத்தில் இருப்போர்க்கு உத்தியம் ஏதுக்கடி - குதம்பாய் உத்தியம் ஏதுக்கடி ? 8
நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு வாட்டங்கள் ஏதுக்கடி - குதம்பாய் வாட்டங்கள் ஏதுக்கடி ? 9
முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்குச் சத்தங்கள் ஏதுக்கடி - குதம்பாய் சத்தங்கள் ஏதுக்கடி ? 10
உச்சிக்கு மேற்சென்று உயர்வெளி கண்டோர்க்கு இச்சிப்பிங்கு ஏதுக்கடி - குதம்பாய் இச்சிப்பிங்கு ஏதுக்கடி ? 11
வேகாமல் வெந்து வெளியெளி கண்டோர்க்கு மோகாந்தம் ஏதுக்கடி - குதம்பாய் மோகாந்தம் ஏதுக்கடி ? 12
சாகாமல் தாண்டித் தனிவழி போவோர்க்கு ஏகாந்தம் ஏதுக்கடி - குதம்பாய் ஏகாந்தம் ஏதுக்கடி ? 13
அந்தரந் தன்னில் அசைந்தாடு முத்தர்க்குத் தந்திரம் ஏதுக்கடி - குதம்பாய் தந்திரம் ஏதுக்கடி ? 14
ஆனந்தம் பொங்கி அறிவோடு இருப்பார்க்கு ஞானந்தான் ஏதுக்கடி - குதம்பாய் ஞானந்தான் ஏதுக்கடி ? 15
சித்தரக் கூடத்தைத் தினந்தினம் காண்போர்க்குப் பத்திரம் ஏதுக்கடி - குதம்பாய் பத்திரம் ஏதுக்கடி ? 16
முக்கோணம் தன்னில் முளைத்தமெய்ஞ் ஞானிக்குச் சட்கோணம் ஏதுக்கடி - குதம்பாய் சட்கோணம் ஏதுக்கடி ? 17
அட்டதிக்கெல்லாம் அசைந்தாடும் நாதர்க்கு நட்டணை ஏதுக்கடி - குதம்பாய் நட்டணை ஏதுக்கடி ? 18
முத்தி பெற்றுள்ளம் முயங்குமெய்ஞ் ஞானிக்குப் பத்தியம் ஏதுக்கடி - குதம்பாய் பத்தியம் ஏதுக்கடி ? 19
அல்லலை நீக்கி அறிவோடு இருப்போருக்குப் பல்லாக்கு ஏதுக்கடி - குதம்பாய் பல்லாக்கு ஏதுக்கடி ? 20
அட்டாங்க யோகம் அறிந்தமெய்ஞ் ஞானிக்கு முட்டாங்கம் ஏதுக்கடி - குதம்பாய் முட்டாங்கம் ஏதுக்கடி ? 21
வேகம் அடக்கி விளங்குமெய்ஞ் ஞானிக்கு யோகந்தான் ஏதுக்கடி - குதம்பாய் யோகந்தான் ஏதுக்கடி ? 22
மாத்தானை வென்று மலைமேல் இருப்போர்க்குப் பூத்தானம் ஏதுக்கடி - குதம்பாய் பூத்தானம் ஏதுக்கடி ? 23
செத்தாரைப் போலத் திரியுமெய்ஞ் ஞானிக்கு கைத்தாளம் ஏதுக்கடி - குதம்பாய் கைத்தாளம் ஏதுக்கடி ? 24
கண்டாரை நோக்கிக் கருத்தோடு இருப்போர்க்குக் கொண்டாட்டம் ஏதுக்கடி - குதம்பாய் கொண்டாட்டம் ஏதுக்கடி ? 25
காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக் கோலங்கள் ஏதுக்கடி - குதம்பாய் கோலங்கள் ஏதுக்கடி ? 26
வெண்காயம் உண்டு மிளகுண்டு சுக்குண்டு உண்காயம் ஏதுக்கடி - குதம்பாய் உண்காயம் ஏதுக்கடி ? 27
மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத் தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம்பாய் தேங்காய்ப்பால் ஏதுக்கடி ? 28
பட்டணஞ் சுற்றிப் பகலே திரிவோர்க்கு முட்டாக்கு ஏதுக்கடி - குதம்பாய் முட்டாக்கு ஏதுக்கடி ? 29
தாவரமில்லை தனக்கொரு வீடில்லை தேவாரம் ஏதுக்கடி - குதம்பாய் தேவாரம் ஏதுக்கடி ? 30
தன்னை அறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்குப் பின்னாசை ஏதுக்கடி - குதம்பாய் பின்னாசை ஏதுக்கடி ? 31
பத்தாவுந் தானும் பதியோடு இருப்பார்க்கு உத்தாரம் ஏதுக்கடி - குதம்பாய் உத்தாரம் ஏதுக்கடி ? 32
|
||||||||
by Swathi on 25 Dec 2012 4 Comments | ||||||||
கருத்துகள் | ||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|